உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

175

பிறவற்றை ஏனைப்பிறர்மேல் வைத்து நடாத்துதல்பற்றி அவ்வரசன் அப்பிறதொழில்களை நடாத்தும் வலியிலான் என்று கோடல் பொருந்தாமையின் அப்பிறவற்றையுந் தானே மேற்கொண்டு நடத்துதற்குரிய அமயம் நேர்ந்துழி, அவன் அவற்றையும் நடத்தக் காண்டு மன்றே. மற்று அவனேவிய பிறதொழில்களைப் புரிவார் அவற்கேயுரிய செங்கோலோச்சுந் திறத்தினைத் தாம் மேற்கொண்டு செய்ய மாட்டாராதலுங் காண்டு மன்றே. இன்னுங் கல்வியறிவுமிக்கான் ஒருமேலோன் தான் கல்வித் துறையிற் செயற்பாலனவாம் அருஞ்செயல் களிலேயே கருத்து ஒன்றி நிற்பினும், அமயம் நேர்ந்தக்கால் தன்னிற் றாழ்ந்தோர் செய்யுஞ் செயல்களையும் அவரினுஞ் சிறக்கச் செய்து செய்து முடிக்கமாட்டுவானாதலும், அவனிற் றாழ்ந்தோ ராயினார். அங்ஙனமே அமயம் வந்தக்கால் அக் கலை வல்லான்செயலைத் தாம் ஒருசிறிதும் மேற்கொண்டு நடத்த மாட்டாராய் இடர்ப்படுதலும் தெளியக் காண்டு மாகலின் ஆற்றலும் அறிவும் மிக்கான் தனக்கேயுரிய தொன்றிற் றான் முனைத்து நிற்பினும் அவன் ஏனையோர் செய்யுஞ் செயல் களையும் வேண்டியக்கால் தான் மேற்கொண்டுநடத்த மாட்டு வானென்றே கடைப்பிடிக்க. இங்ஙனமாகலின், அழித்தற் றொழிலினையே தனக்குச் சிறப்பாய் உடைய முதல்வன் தான் வேண்டியக்காற் படைத்தல் காத்தல் களையும் இயற்றும் மதுகையுடையானென்றே தெளிந்து கொள்க. ஏனைப் படைத்தல் காத்தல்களைச் செய்யும் நான்முகன் திருமால் முதலான ஏனையோரெல்லாம் அழித்தற்றொழிலினைச் செய்ய மாட்டுவா ரல்லரென்ப தூஉம் இது கொண்டு முடிக்கப்படும். அஃதொக்குமாயினும், இறைவனோடொப்ப நிற்கும் முதல்வி அவனொடொப்ப அழித்தற்றொழி லினைச் செய்யமாட்டு வாளல்லளென வுரைப்பின், அஃது அவளிறை மைக்கு இழுக்காய் முடியங் கொலெனின், முடியாது; இறை வனோ டொன்றாய் விரவி நிற்கும் இறைவி அவற்குரிய முதன்மையும் உரிமையு மெல்லாம் தானும் பெற்றுடையளா கலின் தன் காழுநன் ஆணை வழி நின்று ஒரோ ஒரு கால் அழித்தற் றொழிலுஞ் செய்யமாட்டுவா ளென்றே உணர்ந்து கொள்க. என்றாலும், எல்லா உயிர் களையும் படைத்துக் காத்தற் கேற்ற மெல்லிய அறமுதன்மையும் அருண் முதன்மையுமே தனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/200&oldid=1591532" இலிருந்து மீள்விக்கப்பட்டது