உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறைமலையம் 28

இயற்கை யாவுடைய அவட்கு அழித்தற்றொழில் சிறப்பா காதென்க. ஓருயிர் கருவினுளிருந்து படைக்கப் படுஞான்றே அக் கருவைச் சிதைத்து அதனை அதனினின்றும் அகற்றும் அழித்தற்றொழில் அருண்மறம் உடைய முதல்வற்கே சிறப்பா மென்க. அவ்வாறு கூறவேண்டுவ தென்னை? படைத்தலைச் செய்யும் முதல்வியே அக்கருவினை உடனே யழித்தலுஞ் செய்வளென்றுரைத்தால் வரும் இழுக்கென்னை? எனின், படைக்குமவனே யுடனேயதனை அழித்தலுஞ் செய்வ ளெனின், அங்ஙனம் படைத்த தனை உடனே அழித்தலினும் அதனை முற்கொண்டு படையா திருத்தலே அவட்குச் சால்பா மாகலின் அஃது ஃது அவளிறை மைக்கு இழுக்காய் முடியும். அற்றேல், இறைவியாற் படைக்கப் பட்ட கரு முதிராமுன்னரே அதனை அழித்தல் இறைவற்குச் சால்பன்றாய் முடியுமா வெனின், அற்றன்று, அக்கருவினுட் புக்க உயிரின் வினையள வறிந்து அதனை யதனுள் ஓர் இமைப்பொழுது நிலைப்பித்துப் பின்னர் அதனை அதனினின்றும் அகற்றிப் பிறவிப்படியின்மே லேற்றும் முதல்வன் செயல் ஆழ்ந்தாராய வல்லார்க்குச் சால்புடைய ய தாயே தோன்றுமல்லது பிறிதில்லை யென்க. அற்றேல், முன்னேரத்திற் L படைத்துப் பின்னேரத்தில் அழித்தல் முதல்விக்குஞ் சால்பேயாம்; சால்பாக முதல்வியின் வேறாக முதல்வனொருவன் உளனெனக் கோடல் மிகையா மாலெனின், முதல்வனியல்பும் முதல்வியியல்பும் ஆராயாது கூறினாய், அறிவு அருள் என்னும் இரண்டில் அறிவினும் அருள் மேற்பட்டு நிற்கும் இயற்கை முதல்விக்கும், அருளினும் அறிவுமேற்பட்டு நிற்கும் இயற்கை முதல்வற்கும் உண்டென்று பகுத்தறிந்து கொள்க. முதல்வி தனக்குள்ள பேரருட் பெருக்கால், எண்ணிறந்த எல்லா உயிர்களும் பிறவிக்கட் சென்று அறிவும் அன்பும் பெறல் வேண்டி, அவை தமக்குப் பலதிறப்பட்ட உடம்பு களை ஓவாது படைத்துக்கொடுக்குந் தொழிற்கண்ணே முனைத்து நிற்பாளாக, முதல்வனோ அங்ஙனம் படைக்கப்பட்ட

ம்புகளில் நிற்கும் உயிர்கள் அவற்றில் நிற்றற்குரிய கால எல்லையறிந்து அவற்றை யுடனுக்குடன் அவ்வுடம்புகளி னின்றும் மாற்றி யருளுவ னென்க. இவ்வாறு உலகின்கட் காணப்படும் இருவேறு தொழிற்கும் இருவேறு முதல்வர் இன்றியமையாது வேண்டப் படுதலின் அம்மையப்பரிருவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/201&oldid=1591534" இலிருந்து மீள்விக்கப்பட்டது