உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

227

தலைக்கூடிப் பேரின்பப்பேற்றினை அடைதல் வேண்டு மெனவும், அங்ஙனம் அவை அதனை அடைதற்குரிய தவமுயற்சி இத்தகையதால் வேண்டுமெனவும் வற்புறுத்தி, அதனை அடைந்தார் நிலை இவ்வியல்பிற்றாமென விளக்குந் திறத்த வாகும்.

மற்று, இவையிரண்டற்கும் பின்னெழுத்த சிவஞான போதமோ, காணப்பட்ட இவ்வுலகினைக் கொண்டு காணப் படாத கடவுளொன் றுண்டெனவும், அதுதான் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களைப் புரிவதா மெனவும், அழித்தற்றொழிலை இயற்றுவதே ஏனையிரண்டு தொழில்களையும் இயற்ற வல்லதாமெனவும், அம்முழு முதல றிவுப் பொருடான் உலகுயிர்களிற் பிரிவற நிறைந்துநின்று அம்முத்தொழில்களை உயிர்களின் அறிவு விளக்க இன்பப் பேற்றின் பொருட்டு நிகழ்த்தாநிற்கு மெனவும், உடலின் வேறாக உயிர் என்பதொரு பொருள் உண்டெனவும், அவ்வுயிர் தானும் ஒன்றாகாமற் பலவாய்ப் பலவேறு தன்மைகள் வாய்ந்தனவாய் என்றுந் தம்முதல் அழியாமல் இருக்கு மெனவும், அவ்வுயிர் களெல்லாந் தொன்றுதொட்டே ஆணவம் எனப்படும் ஓரிருளால் தம் விழை வறிவு செயல்கள் மறைக்கப்பட்டு நிற்றலின் அவ்விருள் நீக்கத்தின் பொருட்டு இறைவனாற் படைத்துக் கொடுக்கப்பட்ட இப் பல்வேறுடம்புகளைக் கருவியாய்க் கொண்டே அவ்விழை வறிவு செயல்கள் விளங்கப் பெற்று வருகின்றனவெனவும், உயிரின் சேர்க்யைா லன்றி ஐம்பொறி யுணர்வுகள் இயங்காமைபோல இறைவன் சேர்க்கையாலன்றி உயிர்கட்கு விழைவறிவு செயல்கள் விளங்கா வெனவும், மக்கள் தமது சிற்றறிவாற் சுட்டியறிவன வெல்லாம் ‘,அசத்து' என்னும் பெயர்க்குரியனவாயும் மனமொழிகளுக்கு எட்டா நிலையில் இறைவனதருள் வயமாய் நின்று உணரப்படும் ஒரு முழு முதற்பொருள் ‘சிவசத்து' என்னும் பெயர்க்குரிய தாயும் நிற்குமெனவும்., அங்ஙனஞ் சத்தாகிய சிவத்தினெதிரே அசத்தாகிய பொருள் கள் விளங்கமாட்டா வாகலிற் சத்தாய் அவற்றுள் நிறைந்து நிற்குஞ் சிவம் அவையிற்றைத் தன்னின் வேறாய்க் காணாது, அசத்தாம் பொருள்கட்கு உணர்வு ன்மையின் அவை தாமுஞ் சிவத்தைக் காணாது, மற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/252&oldid=1591587" இலிருந்து மீள்விக்கப்பட்டது