உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் - 28

அசத்தையுஞ் சத்தையுங் காண்டற்கியைந்த சத்தாந் தன்மையும் அசத்தாந் தன்மையுந் தன்கண் ஒருங்குடைய உயிர்களே (ஆன்மாக்களே) அவ்விரண்டனையும் உணருந் தன்மைய வாகலின் அதுபற்றி அவை ‘சதசத்து’ என்று வழங்கப்படு மெனவும், அவ்வியல்பு களெல்லாம் அறியமாட்டாது ஐம்புல அவாக்களால் ஈர்ப்புண்டு தானோர் அறிவுப் பொருளென் பதூஉம் உணராது மயங்கி வருந்தும் உயிர்களுக்கு அவ்வுயிர் களுள் உயிராய் மறைந்துநின்று அருள்புரிந்து வரும் முதல்வனே இரக்கமிகுதியாற் குருவடிவிற்போந்து அவ்வியல்புகளை யுணர்த்த அதனான் மெய்யுணர்வு தோன்றப் பெற்று அவ்வுயிர் கள் இறைவன் றிருவடியினை ஒருங்கு தலைக் கூடுமெனவும், அறிவில் பொருள்களிற் பழகிய பழக்கத்தாற் றோன்றிய அறி வாலும் உயிர்கள் தமக்கெனவுள்ள சுட்டறிவாலும் இறைவனை அறிதல் செல்லாமையால் இறைவனது அருளறிவு ஒன்று காண்டே அவை இறைவனை யுணர்ந்து அவ்வுணர்ச்சி பின்னர் அறியாமை யாற் பற்றப் படாமைப் பொருட்டு 'ஓம்சிவம்' எனும் ஐந்தெழுத்தை இடையறாது நினைவிற் பதித்தல் வேண்டு மெனவும், இறைவன் உயிர்களிற் பிரிவின்றி நிற்றல்போல உயிர்களும் இறைவனை விட்டுப் பிறிதொன்றனை நினையாத நிலையில் உறைத்து நிற்குமாயின் ஆணவம் மாயை வினை யென்னும் மும்மலங் களால் அவை தீண்டப் பெறாவெனவும், பொருள்களைக் காணுங் கண்களுக்கு அவற் றோடுட னாய் நின்று தானுங் கண்டு அவை அவையிற்றைக் காணுமாணுஞ் செய்யும் உயிர்போல இறைவனும் உயிர்களோடுடனாய் நின்று அவை மல மாயை வினை களைக் காணுமாறு செய்து தானும் அவற்றைக் காண்பனா கலின் இங்ஙனந் தன்னோ டுடனாய் நின்று காட்டிக் காணும் இறைவன்றன் அருளுதவியினை நினைந்து நினைந் துருகும் உயிர் அவன்றிரு வடியில் ஒன்றி ஒன்றறக் கலத்தல் ஒருதலையாமெனவும், இறைவன் றிருவடிப் போதுகளை உயிர்கள் சேர வொட்டாது தடை செய்யும் மலமாயை வினைகளை மேற்காட்டிய முறையிற் கடைப்பிடியாய் நின்று பழகுமாற்றாற் சுவடறக் கழுவிச் சிவநேய முடையாருடன் கொண்ட இடையறாச் சேர்க்கையால் அவை மீண்டுந் தம்மைப் பற்றாமற் செய்து சிவம் விளங்கித் தோன்றுஞ் சிவனடியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/253&oldid=1591588" இலிருந்து மீள்விக்கப்பட்டது