உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலர்கள் பார்வையில் மறைமலையடிகள்

289

மறைமலையடிகளார் மாப்புகழ் வாழ்க!

தெய்வமாய் எண்ணும் தேவர்கட் கெல்லாம்

தேவனாம் சிவபெரு மானை

மெய்ம்மயிர் முகிழ்ப்ப உளத்திடை நிறுவி மேன்மையாம் சைவசித் தாந்தம்

கைவரப் பெற்றுக் கற்றவர் வியப்பக்

களிப்புற விரித்துரை யாற்றிப்

பொய்வழக் கான புறமதங் கடிந்த

புண்ணியர் மறைமலை யடிகள்.

ஊனினை உருக்கும் வாசகம் தனக்கோர்

ஒப்பிலா உரைதரு நூலும்

தேனினும் இனிய வாசகர் காலம்

தெரிந்திடும் ஆய்வுரை நூலும்

வானினும் உயர்ந்த வளநிறை கருத்து

வாய்த்தபன் னூல்களும் எழுதி

ஆனின்நற் பாலின் சுவையும் கைப்பெய்த

அளித்தவர் மறைமலை யடிகள்.

கடல்வளை புவியில் காலங்காண் பொணாத

கனிதமிழ் மொழியினில் எழுந்த

சுடரொளிச் சங்க நூல்முதல் பலவும்

தூய்மையாய் அச்சினில் ஏற்றிக்

(1)

(2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/314&oldid=1591651" இலிருந்து மீள்விக்கப்பட்டது