உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மறைமலையம் - 28

கெடலரு மரபில் தமிழினை வளர்த்த

கீர்த்தியர் பலருளர்; எனினும்

வடமொழி கலவாத தனித்தமிழ்ப் பற்றை வளர்த்தவர் மறைமலை யடிகள்.

நலமலி தமிழின் நடையிடைச் செய்யுள் நடைதரு நூல்களே பலவாம்;

புலமலி வில்லா எளியரும் உணரப்

புத்துரை நடைசெய்தும் என்றே

நயமிலா நடையில் நூல்பல எழுதி

நற்றமிழ் குலைத்தனர்; ஆனால்

(3)

உயர்தனிச் செம்மை உரைநடை எழுதி உதவினர் மறைமலை யடிகள்.

(4)

ஆங்கிலம் நல்ல அருந்தமிழ் மற்றும்

ஆரியம் ஆயபன் மொழியில்

ஓங்கிய புலமை வாய்ந் ததோ டன்றி ஓதிய அம்மொழி நூல்கள்

பாங்குறத் திரட்டிப் பாதுகாத் தவற்றைப்

பயன்பட வைத்தனர் எங்கள்

தேங்கிய புகழால் திசைஎலாம் பரவும்

செம்மலாம் மறைமலை யடிகள்

தென்றமிழ் மொழியுட் செறிந்திடு நயமாம்

தெள்ளிய அருவிபாய் மலையாய்

நன்னராம் சைவ சித்தாந்த முடிபாம்

நலங்கிளர் முடிகொளும் மலையாய்

மன்னிய குரிசில் மறைமலை யடிகள் மாப்புகழ் வாழிவா ழியவே.

மறைமலை யடிகள் வரைந்தநூல் தம்மை மாண்புற அச்சினிற் பதித்தும்

(5)

(6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/315&oldid=1591652" இலிருந்து மீள்விக்கப்பட்டது