உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

3. பாசம்

இனிப் 'பாசம்' என்பதனியல்பு சிறிது காட்டுவாம். பாசம் என்னும் இச்சொல் ‘கட்டு' என்னும் பொருளை யுணர்த்தும் பச் என்னும் பகுதியடியாகப் பிறந்து சீவான் மாவைக் கட்டி நிற்பது என்னும் பொருட்டாம். இச் சிவ ஞானபோதச் செம்பொரு ணூலின் கண்ணே இப்பாசம் ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகப் பகுக்கப் பட்டுள்ளது. இவை மூன்றனுள் ஆணவம் என்பது இயற்கையே உயிரோடு பொருந்தி நிற்பதொன்றாகலின், அது சகசமலம் என்றும்; கன்மம், மாயை என்னும் ஏனை இரண்டும் ஆணவமலம் நீங்குமுகத்தால் ஆன்மாக்களைச் செயற்கையாக இடையே வந்து பற்றுவன வாகலின் அவை ஆகந்துகமலம் என்றுஞ் சொல்லப்படும்.

இனி ஆணவமலத்தினியல்பும், அஃது ஆன்மாக்க ளோடு அநாதியே உடன் நிற்குமாறும் பசு வியல்பு கூறிய வழி ஆண்டு னிதெடுத்து விளக்கினாம். ஆதலால் அதனை யொழித்து ஒழிந்த ஏனை இருமலங்களையும்பற்றி இங்கு முறையே சுருக்கியுரைப்போம்.

கன்மம் என்பது வினை வினை அல்லது தொழில். ஒரு பொருளின் அசைவே தொழில் என்றாகும். பொருளசைவு ல்லையானால் அதன் றொழிலும் இல்லையாம். முழுதும் ஆணவமலத்தின் வயப்பட்டுக் கிடந்த காலத்து ஆன்மாவின் இச்சா ஞானக்கிரியைகளுக்குச் சிறிதும் அசைவில்லாமை யான் ஆண்டு ஆன்மாவுக்குக் கன்மம் இல்லை யென்தூஉம். இறைவனது திருவருட் சக்தியான் எடுக்கப்பட்டு மாயை யோடு பொருத்தப்பட்ட வழி ஆன்மாக்கள் தம்மாட்டு அவ் விச்சா ஞானக்கிரி யைகள் சிறிது விளங்கப் பெற்றமையானே ஆண்டுக் கன்ம முண்டாயிற்றென்பதூஉம் இதுகொண்டு அறியற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/54&oldid=1591383" இலிருந்து மீள்விக்கப்பட்டது