உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

-

  • மறைமலையம் - 28

பாலனவாம். எனவே, ஆன்மாவின்றன்னோடு சகசமாய் உடனிற்பதாகிய ஆணவமல நீக்கத்தின்பொருட்டு அவ்வான்மா வோடு இடையொரு காலத்து மாயாமலங் கூட்டப் படுங்கால் அவற்றின் நடுவே கிளைப்பது கன்ம மென்பது ஈண்டே தெளி வுறுத்தப் பட்டதாயிற்று. அற்றேல், கன்மமலம் அநாதியென் றுரை நிகழ்த்துஞ் சித்தாந்த வாக்கியத்தோடு ஈது முரணு மாலோ வெனின்; - முரணாது. அது, கன்மத்தின் இருப்பு அநாதி யென்று கூறியதே யல்லாமல், அஃது ஆன்மாவின்கட் பற்றியதும் அநாதி யென்று கூறியதாகாது. ஆன்மாவின்கட் கன்மற் தோன்றியது மாத்திரமே ஆதியென்றுரைக்கப் படுமல்லது. உயிரின் கட்டற்கிழமைப் பொருளாக உள்ள அதனிருப்பு அநாதி முறைமைத் தேயா மென்பது தெளிபொருள். ஆகவே, கன்மம் அநாதி யென்னுஞ் சித்தாந்தவுரையோடு ஈண்டுக் கூறியது, சிறிதும் முரணாது அதற்குப் பெரிதும் இணக்க மாவதேயாமென்க.

அற்றேலஃதாக, கன்மம் ஆன்மாவின்கட் டற்கிழமைப் பொருளாயின், அஃதெஞ்ஞான்றும் அதனைப் பிரியாதாகல் வேண்டும்; பிரியாதாகவே அஃதான்ம இயற்கைப் பொருளாகு மாகையால் அதனை ‘மலம்’ என வைத்தோதி அஃது ஆன்மாவைப் பந்தமுறுத்து மெனக் கூறுதல் என்னையெனின்

உயிர் மலத்தைச் சார்ந்தவழி அம்மலத் தினியல்புற்றும், அது சிவத்தைச் சார்ந்தவழி அச்சிவத்தி னயல்புற்றும் நிற்கும் ஓர் உரிமையுடைத்தாம். உயிரின் அறிவாகிய ஞானமும், அதன் விருப்பாகிய இச்சையும், அதன் றொழிலாகி கிரியையும் ஆணவமலத்தின் வயப்பட்டு நிற்குங்கால் அம் மலத்தினுருவே தமதுருவாய்க்கொண்டு நிற்குமென்பது பெறப்பட்டது. இங்ஙனம் நின்ற நிலையில் அவ் விச்சாஞானக்கிரியைகள் மாயையின் உதவியாற் சிறிது விளங்கப்பெறுமெனின், அவை ஆணவமலத்தின் வயப்பட்டே நிகழாநிற்கும். மலத்தின்வழி நிகழும் அந்நிகழ்ச்சிகள் இவ்வாற்றாற் கன்மமாமென்றும் அவை ஆன்மாவைப் பந்தமுறுத்துமென்றும் அறிவு நூல்கள் கூறுவவாயின. அற்றாயின், மலத்தின்வழி நிகழும் அவை எஞ்ஞான்றும் உயிர்கட்குத் துன்பம் மாத்திரையே தருதல் வேண்டுமல்லது ஓரோவழி இன்பமுந் தருதல் என்னை யெனின்;

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/55&oldid=1591384" இலிருந்து மீள்விக்கப்பட்டது