உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
305

நரம்பையும் பற்றிவரும் நோய்களைத் தீர்த்தற்கு இவ்வறிதுயில் மிகவும் ஏற்றதொன்றாகும். அத்தகைய நோய் கொண்டாரை இத்துயிலில் நெடுநேரம் இருக்கச்செய்தல் நன்று; ஒருநாள் முழுதும், அல்லது ஒருகிழமை முழுதுங் கூட அவரை இத்தூக்கத்தில் இருக்கச் செய்யலாம். நரம்பின் தளர்ச்சியும் வலிவின்மையும் மிகுதியாயிருக்குங்கால், முடிமுதல் அடிகாறும் இரண்டு கைகளாலும் கீழ்நோக்கி முன்னும் பின்னும் தடவுக; அதன்பின் நோயுள்ள இடங்களில் மட்டும் தடவுக. நெஞ்சப் பையின் அசைவு வலிகுறைந்து காணப்படுமானால், அல்லது அஃது ஒழுங்கின்றி நடைபெறுமானால் அவ்விடத்தைத் தடவியபின் வாயினால் ஊதுக. அதனால் நோயாளியின் றுப்புகளுக்குக் கதகதப்பும் இனியதோர் உணர்ச்சியுந் தோன்றக் காணலாம். மிகக் கொடிய இரைப்பிருமலையும், தோட்பட்டைகட்கு நடுவே பிடரியிலிருந்து முதுகுநெடுகக் கீழ்நோக்கி மெல்ல ஒரே ஒழுங்காய் ஊதுதலால் தணியச் செய்யலாம். ஆனால் ஒன்று; நோயாளி தமது உடம்பின்மேற் பட்டுத்துணி அணிந்திருப்பாரானால் அதன்மேல் வாயினால் ஊதிற் பயன் உண்டாகாது; ஆனதுபற்றி அவர் பஞ்சுநூற்றுணி அணியுமாறு செய்வித்து இம்முறையைச் செய்க. அல்லது துணியை விலக்கிச் செய்யத்தக்கவராயிருந்தால் அவ்வாறு செய்தலும் ஆம். இங்ஙனம் வாயினால் ஊதுங்கால் மற்றொன்றும் உன்னித்தல் வேண்டும். நெஞ்சினுள் மூச்சுப்பை நன்கு நிறையக் காற்றை உள்ளிழுத்து, வாயை நோய்கொண்ட இடத்தின்மேல் நெருங்க வைத்து, உரமாகவும் ஒரே ஒழுங்காகவும் ஊதித், திரும்பவும் மூச்சு இழுக்கும் பொருட்டு, முகத்தை அப்புறமாகத் திருப்புகையில், ஊதின இடத்தினின்றும் துவெதுப்பு நீங்காமைப் பொருட்டு வலது கையை அதன்மேல் வத்து அதனைப் பொத்திக் காள்க. மூச்சிழுக்குங்கால் அதனைப் பொத்தியும், திரும்ப ஊதுங்காற் கையை அப்பால் எடுத்தும் இங்ஙனமே பலகாற்செய்க.

இனிப்,பல்வலியால் வருந்துவோரை நினைவற்ற துயிலிற் போகச்செய்து, பின்வருமாறு செய்தால் அந்த நோயை உடனே தணியச் செய்யலாம். பல்வலி முகத்தில் எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அந்த இடத்தின்மேல் வலது கையைச் சிறிதுநேரம் வைத்தல் வேண்டும்.அதன் பிறகு,வலியிருக்கும் பக்கமாய்க் காதின்மேல் மெல்லியதொரு துண்டுக் கம்பளியை மடித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/338&oldid=1626201" இலிருந்து மீள்விக்கப்பட்டது