உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

67

மற்றுத் திருவள்ளுவரோ தமது கால வழக்கினைத் தழீஇத் துறவறம்' என்பதொன்று கூறினாராயினும், அவ்வியலில் இம்முப்பத்திரண்டறங்களுள் ஏதொன்றும் எடுத்துரையாது, புலாலுண்ணாமை, கள்ளாமை, வெகுளாமை,

L

ன்னா

செய்யாமை, கொல்லாமை, பொய்யாமை, முதலாகச் செய்வதில்லாச் செயல்களை அறங்களாக எதிர்மறை முகத்தாற் கூறியருளினார். எனவே, எனவே, அவர்கூறும் வகையிலிருந்துந் துறவினை’ அறம் எனச் எனச் சொல்லுதற்கு ஏதும் இடம் இல்லாமை நன்கு விளங்குகின்ற தன்றோ? அதுவேயுமின்றி, அவர் மனைவி மக்களைத் துறந்து தனியிருந்து நோற்பதே தவம் என்று ‘திருக்குறளில்' ஓரிடத்தாயினுங் கூறாமையினை உற்றுநோக்கும்வழி, ஆசிரியர் தொல்காப்பியனார் மொழிந்த வாறே மனைவியுந் தானுமாயிருந்து அகப்பற்றுப் புறப்பற்று இன்றித் தூய அன்பின் வழிநின்று நோற்பதாகிய பண்டைத் தவநிலையே அவர்க்கும் உடம்பாடென்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இதுகாறும் அறம் என்பதைப்பற்றி ஆராய்ந்த அளவில், அஃது இல்லறம் ஒன்றற்கே உரித்தாய்க், காதலன் பின்வழி நிகழும் மனைவாழ்க்கையின் நடுவெல்லையில் நோற்கப்படுவதாகிய தவநிலையினையுந் தன்கண் அடக்கி நிற்கும் என்பதூஉம், முப்பத்திரண்டு வகையாகச் செய்யப்படும் அறங்களுள் ஏதுஞ் செய்யப்படுவதின்றி எதிர்மறை வகையாற் செயலின்றி நினைவளவில் நிற்பனவாகிய கொல்லாமை பொய்யாமை கள்ளாமை முதலியவற்றால் நிலைப்படுவதாகிய தவநிலையினைத் துறவறம் என்றல் ஆசிரியர் தொல்காப்பிய னார்க்கு உடன்பா டன்றென்பதூஉம், இப்பேராசிரியர் அறிவுறுத்திய அறத்தின் வழியொழுகியே திருவள்ளுவரும் நம் சைவ சமயச் சான்றோர்களும் இறைவன் திருவருட்பேற்றினை எய்தின ரென்பதூஉம் பௌத்த பளத்த சமணமத சமணமத வழிநிகழும் இஞ்ஞான்றைப் போலித் துறவொழுக்கம் பல்பெருந் தீங்கு கட்கும் இடனாய் நிற்றலின் அதனை யொழித்து மனை வாழ்க்கையின்பாற் பட்ட தவநிலையில் நின்று தமக்கும் பிறர்க்கும் பயன்பெற்றொழுகிச் சிவபிரான் திருவடிக்குரிய ராதலே நம் சைவசமயப் பெரியார் தங் கோட்பாடா மென்பதூஉம் பெறப்பட்டன.

இனி, உலக முயற்சியை விட்டுத் தவநிலைக்கண் நிற்றல் நம்மனோர் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத கடமையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/100&oldid=1592210" இலிருந்து மீள்விக்கப்பட்டது