உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் - 30 -

ஏ னென்றால், இவ்வுலகியல் வாழ்க்கை நீடு நிற்பதன்றாய்ச் சடுதியில் எதிர்பாராதே மறைந்தொழிவதாகலானும், இனி நாம் சொல்லும் மறுமை யுலகத்திற்கு இங்கே துணைவராயிருந்த மனைவி மக்கள் சுற்றத்தார் நண்பர் என்னும் எவரும் நம்மோடு உடன்வந்து துணையாய் நிற்க மாட்டுவார் அல்லராகலானும், இம்மைக்கண் நம்மை இவ்வுடம்பில் வருவித்து வைத்துப் பலவகையின்பங்களையும் நமக்கு ஊட்டி அதன்பின் நம்மை அவ்வுடம்பினின்றும் பிரித்து வேறோர் உலகத்தில் வேறோர் உடம்பிற் புகுத்துவானாகிய இறைவன் ஒருவனே இங்கும் அங்கும் எங்குந் துணையாக நிற்பனாகலானும், இப்பிறவியில் நாம் நுகர்ந்த இன்பங்கள் எல்லாம் இன்பம் இத்தன்மைய தென்று நமக்கு உணர்த்தும் அவ்வளவுக்கே பயன்படுவனவன்றி வேறு துன்பக் கலப்பில்லாமல் நீள இருந்து நம்மை மகிழ்விக்க மாட்டாவாகலானும், நிலைபேறில்லாப் பொருள்கள் நிலை பேறில்லாச் சிற்றின்பத்தையே தரக்காண்டலால் நிலையான ன்பத்தைப் பெறவேண்டுவார் எல்லாரும் நிலை மாறுதலன்றி விளங்கும் இறைவன்பாலன்றிப் பேரின்பத்தை நுகர்தல் ஏலாமையானும் நம் ஆசிரியன்மார், "பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே”

ரு தன்மையனாய்

ஒரு

என்றும்,

“ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளுஞ் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி யேகம்பனே’

என்றும்,

66

(தொல்காப்பியர்)

(பட்டினத்தடிகள்)

"தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய், கோத்தும்பீ.”

(மாணிக்கவாசகர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/101&oldid=1592214" இலிருந்து மீள்விக்கப்பட்டது