உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

69

என்றும் அருளிச் செய்து எல்லா வுணர்வுகளும் நமக்கு வாய்த் திருக்கும் இவ் வரிய மக்கட் பிறவியிலே நாம் ஏமாந்து இறந்தொழியாமல், நமக்கு ஒப்பற்ற துணைவனாயிருக்கும் இறைவனை இறுகப் பற்றும்படி நம்பால் வைத்த இரக்கத்தால் நமக்கு அறிவு தெருட்டி யிருக்கின்றார். இவர் தம் அருளுரை களைக் கேளாமல், நான் என்று ஒரு பொருளில்லை, என்னின் வேறான உயிர்களும் இல்லை, இறைவன் உண்டென்பதும் பொய், வருவதும் போவதும் நிற்பது மாய உலக நிகழ்ச்சி களெல்லாம் இயற்கையே என்று பாழ்ங்கொள்கைகளை வாய்க்கு வந்தபடி பேசி நம்மனோர் இவ் வரியவாணாளை வ் வீணாளாக்குவார்களாயின், உண்மைக்கு மாறுபேசி இறைவனைத் துணையாகப் பற்றாமையின், இறந்தொழிந்தபின், அடங்கா நாவினராகிய அவர்கள் துணையின்றி இருளுலகத்திற் சென்று பெருந்துன்பம் உழப்பர்கள்; இது திருவள்ளுவ நாயனார்,

“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்”

என்றமையாலும் உணரப்படும். கடவுளை நம்பாதவர்கள், கடவுளின் பெருந்துணையை நாடாதவர்கள், இறந்தபின் இருளுலகத்திற் சென்று துன்புறுகின்றார்கள் என்பதனை, அகக்கண் திறக்கப் பெற்று மறுமை யுலகங்களின் நிகழ்ச்சி களைக் காணவல்ல ஆங்கில ஆசிரியரான ஸ்டெயிண்டன் மோசஸ் (Stainton Moses, M.S.) என்பவர் தக்கார் பலர் முன்னிலையில் ஆராய்ந்து காட்டிய மெய்யுரைகளால் இனிது விளக்கி யிருக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/102&oldid=1592218" இலிருந்து மீள்விக்கப்பட்டது