உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

20. முப்பொருள் உண்மை

ஆகவே, உலகத்தியல்பையும், உயிர்களி னியல்பையும், இறைவனியல்பையும் உள்ளவாறே யுணரும் மெய்யுணர்வு வாய்த்தாலன்றி, இவற்றை யாராய்ந்து பார்த்தற்கு ஏற்ற பகுத்துணர்வு வாய்ந்த மக்கள் தவத்தைச் செவ்வனே செய்து வீடுபேற்றை எய்துதல் இயலாது; இப்பிறவித் துன்பத்தை நீக்குதலும் ஆகாது. இதனாலன்றோ திருவள்ளுவர்,

“ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து

என்றும்,

“பொருள்அல் லவற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு”

என்றும் அருளிச் செய்தார். ஆதலால், நம் முதலாசிரியராகிய தொல்காப்பியனாரும், அவர் காலந்தொட்டு வந்த நம் ஆசிரியர் மற்றையோரும் அம்மூன்று பொருள்களையும் ஆராய்ந்து கண்ட முடிபுகளை ஒரு சிறிது எடுத்துக்காட்டி அவ்வளவில் இவ் விரிவுரையை முடிப்பாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/103&oldid=1592221" இலிருந்து மீள்விக்கப்பட்டது