உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

21. உலகின் உண்மை

முதலில் இவ்வுலகத்தினியல்பு இன்னதென்பது ஆராயற் பாற்று, நம் முதலாசிரியர் தொல்காப்பியனார்,

“நிலந்தீ நீர்வளி விசும்போடு ஐந்துங்

கலந்த மயக்கம் உலக மாதலின்

(மரபியல்)

என்றும் கூறுதலின், நிலமும் நீருந் தீயுங் காற்றும் வானும் என்னும் ஐம்பெரும் பொருள்களின் கலவையே உலகம் என்பது பெற்றாம். பிற்காலத்திற் பௌத்தரில் ஒருசாரார் முன் நேரத்தில் நின்ற பொருள் பின் நேரத்தில் இல்லையாம். எனவும், மற்றும் ஒருசாரார் முயற்கொம்பும் ஆகாயத் தாமரையும் போல் அஃது இல்பொருட் டோற்றமாம் எனவும், மாயாவாத வேதாந்தத்தார் அது பிரமப் பொருளிற் றோன்றும், இல்பொருண் மாயையாமெனவும் உலகத்தின் இயல்பைப்பற்றிக் கூறுங் கொள்கைகள் உண்மைக்கு மாறான கொள்கைகளாயிருத்தல் போலாது, ஐம்பெருமெய்ப்பொருள்களின்

கலவையே

உலகமாம் எனக் கூறுந் தொல்காப்பியனாரது கோட்பாடு நாடோறும் உலகியலிற் பயிலும் நமது அறிவுக்கு எவ்வளவு பொருத்தமாயிருக்கின்றது! உலகத்துப் பொருள்களெல்லாம் அடுத்தடுத்து உருமாறி வருவனவே யல்லாமல் அவை இல்லாத வெறும் பாழாதல் எஞ்ஞான்றும் இல்லையெனப் பல வியத்தகு ஆராய்ச்சிகளால் ஆராய்ந்துரைக்கும் இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூாலார் தம் மெய்யுரையும் இற்றைக்கு ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னிருந்த தொல்காப்பியனா ருண்மையுரையும், ஒருங்கொத்து நிற்றல் பெரிதும் வியக்கற்பால தன்றோ? சைவசித்தாந்த மெய்கண்டதேவர் 'உள்ளதே தோற்ற உயிர் அணையும்' என்று தொல்காப்பியனார் கருத்தையே யொட்டிக் கூறுதலும்

முதல் நூல் ஆசிரியரான

நினைவிற் பதிக்கற்பாற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/104&oldid=1592225" இலிருந்து மீள்விக்கப்பட்டது