உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

22. உயிரின் உண்மை

னி, இவ்வுலகத்துள்ள உயிர்களையெல்லாம் ஓரறி வுடையன, ஈரறிவுடையன, மூவறிவுடையன, நாலறிவுடையன, ஐயறிவுடையன, ஆறறிவுடையன என்று டையன என்று

பகுத்து,

66

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”

என்று ஆசிரியர்

தால்காப்பியனார்

அறுவகையாகப்

கூறுமாற்றாற்,

சிற்றறிவுடைய உயிர்கள் தீவினைக்கு ஏதுவான மலத்தால் மறைப்புண்டு கிடந்து, இறைவனாற் பிறவிக்கு வருங்கால் முதலில் தொடுத லுணர்வே தோன்றுதற்கு இடந்தரும் புல்லும் மரனுமாய்ப் பிறந்தும், அதன்பிற் சிறிதறிவு விளங்கித் தொடுதலுணர்வுஞ் சுவையுணர்வும் விளங்குதற் கேற்ற நத்தை கிளிஞ்சில் முதலியனவாய்ப் பிறந்தும், அதன் பிற் சிறிதறிவு மிகுந்து அவ்விரண்டொடு மூக்குணர்வுந் தோன்றுதற்கேற்ற கறையான் எறும்பு முதலியனவாய்ப் பிறந்தும், அதன்பின் மேலும் அறிவு மிக்கு அம்மூன்றொடு கண்ணறிவுந் தோன்றற் கேற்ற நண்டு தும்பி முதலியன வாய்ப் பிறந்தும், அதன்பின் இன்னும் அறிவு மிகுந்து அவற்றொடு செவியறிவும் புலனாதற்கேற்ற விலங்குகளும் மாக்களுமாய்ப் பிறந்தும், அதன்பின் அறிவு விளக்கம் மிக விரிதலின் அவ்வைந்துடன் மனவறிவும் விளங்குதற்கேற்ற ஆறறிவுடைய மக்களாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/105&oldid=1592229" இலிருந்து மீள்விக்கப்பட்டது