உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

73

பிறந்தும் இங்ஙனம் மலந்தேயும் நிலைக்குத் தகச் சிற்றுயிர்கள் முறைமுறையே அறிவிலும் பிறவியிலும் மேலேறி வருதல் தெளியப்படும். இங்ஙனமே மாணிக்கவாசகப் பெருமானும்,

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்தினைத்தேன் எம்பெருமான்

என்று கூறுதல் காண்க. எனவே மலந்தேயும் அளவுக் கேற்ப உயிர்கள் மேன்மேற் பிறவியிற் சேரு மென்பதும், அதனால் ஓருயிர்க்குப் பல பிறவிகள் உளவா மென்பதும், பிறவிகடோறும் ஈட்டப்படும் வினைகளே மேன்மேற் பிறவிகளை எடுத்தற்கு ஏதுவாமென்பதும் ஆசிரியர் தொல்காப்பினாருக்குக் கருத்தாதல் போலவே, திருவள்ளுவனார்க்குஞ் சைவசமயாசிரியர், சந்தானசிரியர்க்குங் கருத்தாதல் காணப்படும். பிறவிகள் பல உளவாதலும் உயிர்கள் அப்பிறவிகளில் மாறிமாறிச் செல்லுதலும், அப்பிறவிக்கு ஏதுவான இருவினைகளும், அவ்வினைக் கேதுவான ஆணவ மலமும் பழைய ஆரிய நூலாகிய இருக்கு வேதத்திற் காணப்படாமையின், இக்கோட் பாடுகளெல்லாம் நம் பண்டைத் தமிழ்மக்கள் இறைவன் திருவரு ளுதவிகொண்டு தாமாகவே கண்டறிந்தன வாகுமென்பதை யுணர்ந்து அத் தமிழ் ஆசிரியர் வழிவந்த நாம் பெரிதும் மகிழக்கட வோமாக.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/106&oldid=1592234" இலிருந்து மீள்விக்கப்பட்டது