உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

23. கடவுள் உண்மை

இவ்வாறு பிறவிகடோறுஞ் சிறிது சிறிதாய் அறிவு விளங்கப் பெறுஞ் சிற்றுயிர்கள் போலாது இயல்பாகவே விளங்கப் பெறும் பேரறிவுடையனாகிய இறைவன் ஒருவன், இவ்வுயிர்கள் வேறாய் உளன் என்பதூஉம், அவன் அவ்வாறு இயல்பாகவே விளங்கிய அறிவினனாய் நிற்பது உயிர்களின் வினைக்கு ஏதுவாகிய மலத்தாற் பற்றப் படானாய் அவன் பெருந்தூய்மையும் நுட்பமும் உடையனாய் இருத்தலே காரணமாய் என்பதூஉம் தெற்றென விளங்க ஆசிரியர் தொல்காப்பியனார்,

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூ லாகும்"

காணப்படுகின்றனன்

என்று அருளிச் செய்தமை பெரிதும் நினைவிற் பதிக்கற்பாற்று. சிற்றுயிர்களும் இறைவனும் ஒன்றே என்றும், அற்றன்று சிற்றுயிர்கள் பொய் இறைவனே மெய்யென்றும், அதுவு மன்று இறைவன் ஒருவனே குடங்கடோறுங் காணப்படுந் திங்களின் சாயல்போல் உடம்புக டோறும் உயிர்களாய்க் என்றும், அதுவும் பொருந்தாது நெருப்பினின்று பொறிகள் தெறித்தாற் போல் இறைவனிலிருந்தே சிற்றுயிர்கள் உண்டாயின வென்றும், அதுவும் பொருத்தமின்றி ஒன்றுமில்லா வெறும் பாழே உயிரும் இறைவனுமாமென்றும், பிற்காலத்தாரிற் சமயத்தார் பற்பலரும் இறைவனியல்பையும் உயிரின் இயல்பையும் உலகவழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் ஒட்டிய வரையறுத்துணர மாட்டாது பெரிது மயங்கிக் கூக்குரலிட்டுத் தம்மிலே கலாம் விளைத்து நிற்ப, இற்றைக்கு ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னரேயே உயிரின் தன்மையும் இறைவன் தன்மையும் இத்துணைப் பொருத்தமாக வரையறுத்து நமக்கு அறிவுவிளக்கிய ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/107&oldid=1592238" இலிருந்து மீள்விக்கப்பட்டது