உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

75

தால்காப்பியனார் தம் அஃகியகன்ற அறிவின் திறத்தை எங்ஙனம் புகழவல்லேம்! நமக்கு அவற்றை நன்கு விளங்க வைத்து அவர் நமக்குச் செய்யாமற் செய்த பேருதவிக்கு எங்ஙனம் அவர்க்கு நன்றி செலுத்த வல்லேம்! தொல்காப்பியனார் கூறியவாறே திருவள்ளுவரும் இறைவனை ‘வாலறிவன்' அஃதாவது விளங்கிய அல்லது தூய அறிவினன் என்று கூறுதலும் நினைவு கூரற்பாற்று.

இனி, இச்சூத்திரத்தில் இறைவன் மக்களுக்கு மெய்யுணர்வு தோற்றுவித்தற்பொருட்டு அவர்மேற்சென்ற அருளிரக்கத்தால் முதல்நூல் அருளிச் செய்தானென்று ஆசிரியர் உரைத்தலால் இறைவன் பேரிரக்கமுடையன் என்பதூஉம், அவன் முற்காலத்தே தெய்வத் தமிழ்மொழியின் கண் முதல் நூல் அருளிச் செய்தா னென்பதூஉம் இனிது பெறப்படும். இங்ஙனம் இறைவன் தமிழ்மொழி யில் முதல் நூல்

அருளிச்

செய்தமையாலன்றோ மற்றை மக்கட் பிரிவினரெல்லாம் முப்பொருளுண்மை அறியாராய் மயங்கிநிற்பத் தமிழ் மக்கள் மட்டும் பண்டுதொட்டு இன்று காறும் அவ்வுண்மைகளைத் தெளிய அறிந்து தலைசிறந்து நிற்கின்றார். இங்ஙனம் பண்டைநாளில் இறைவன் தமிழின்கண் முதல்நூல் அருளிச் சய்து அறம் பொருள் இன்ப வீட்டின் இயல்புகளை விளக்கினமை,

“அருந்தவர்க்கு ஆலின்கீழ் அறமுதலா நான்கினையும் இருந்தவர்க்கு அருளுமது எனக்கறிய இயம்பேடீ

அருந்தவர்க்கு அறமுதல்நான்கு அன்றருளிச் செய்திலனேற் றிருந்தவர்க்கு உலகியற்கை தெரியாகாண் சாழலோ"

என்று மாணிக்கவாசகப் பெருமானும், ஏனைச் சைவ சமயாசிரியருங் கூறுமாற்றாற் செவ்வனே புலனாம். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கனையும் உணர்த்துதல் பற்றி இறைவன் அருளிச் செய்த தமிழ்நூல் நான்மறையெனவும் வழங்கப்படலாயிற்று.

இனி, இத்துணை இரக்கமுடையனாகிய இறைவன் சிற்றுயிர்களாகிய நமக்கு அணுக்கனாய் நின்று நாம் செய்யும் வழிபாடுகளை ஏன்று கொள்ளும் உண்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/108&oldid=1592242" இலிருந்து மீள்விக்கப்பட்டது