உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் - 30 :

-

“கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே " என்னுஞ் சூத்திரத்தால் நம்

தய்வ முதலாசிரியர் தொல்காப்பியனார் நன்கு விளக்கியிருக்கின்றார். அதன் நுட்பமும், இறைவன் ஒருவனே முருகன், பிள்ளையார், திருமால், சிவபிரான் என நிற்றலும், இவைபற்றி எழுந்த புராணகதைகளுட் ட் பொருந்துவன பாருந்தாதனவும் "மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்” என்னும் எமது விரிந்த நூலிலும், இப்போது யாம் வெளியிட்டிருக்கும் “கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா” என்னும் எமது நூலிலுங் கண்டுகொள்க. அவையெல்லாம் இப்போது விரிக்கிற் பெருகும். இதுகாறும் விளக்கியதுகொண்டு, பல்லாயிர ஆண்டுகட்கு முன்னமே நம் முதலாசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்திய விழுமிய கொள்கைகளே கோட்பாடுகளாக இன்று காறும் நிலவி வருதல் தெற்றென விளங்கா நிற்கும். ஓம் சிவம்.

நம்

சைவசமயக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/109&oldid=1592245" இலிருந்து மீள்விக்கப்பட்டது