உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

தலைமைப் பேருரைமேல் நிகழ்ந்த சில தடைகளுக்கு விடை 1. முகவுரை

திருப்பாதிரிப்புலியூரிற் கூடிய சைவர் மாநாட்டில்யாம் அவைத்தலைவராயிருந்து நிகழ்த்திய தலைமைப் பேருரைக்கட் போந்த சில கருத்துக்களுக்கு மறுப்பாகத் 'தலைமைப் பேருரை யாராய்ச்சி' என்னும் ஒரு கட்டுரை திரு. பொ. முத்தையா பிள்ளை என்பவரால் எழுதப்பட்டுச், “சித்தாந்தம்” என்னும் திங்கள் தாளிலும் 'சிவநேசன்', என்னும் கிழமைத் தாளிலும் வெளிப்படுத்தப்பட்டது.

நோக்குவார்களாயின்,

பழந்தமிழ் நூல்களிலுந், தமிழ்ச்சைவ நூல்களிலும் ஆழ்ந்து நிறைந்த கல்விகேள்விக ளுடையார் எமது தலைமைப் பேருரை யினையும் அதன்மேலெழுந்த மறுப்பினையும் நடுநின்று ஒத்து அவர்கட்கு நமது தலைமைப் பேருரையின் பொருள்கள் ஆசிரியர் தொல்காப்பியனார் முதல்வந்த நம்பண்டைத் செந்தமிழ்ச் சான்றோர்களாற் கைக்கொள்ளப்பட்டு, நம் தமிழ்நாட்டவரை அன்பிலும் ஒற்றுமையிலும் இன்புற்று வாழச் செய்து வழங்கியவைக ளாதலும், அதற்கு மறுப்பாய் எழுந்த பொருள்கள் பண்டிருந்த நம் தமிழ்நாட்டவரால் ஒரு சிறிதுங் கைக் கொள்ளப்படாமற், பின்வந்து குடியேறிய ஆரியர் தம்மைப் பலவகையாலும் உயர்த்தி நம் தமிழ் மக்களைப் பலவகையாலுந் தாழ்த்தி அவர்தம் வாழ்க்கையினைச் சீர்குலைத்தற் பொருட்டுக் கட்டிய சாதி வேற்றுமையும் புராணப் பொய்யுரையும் என்னும் மயக்கில் வீழ்ந்து தமக்கென அறிவிலரான போலிச்சைவரும் அவர்வழி நிற்பாருங் கைக்கொண்டு, மேலும் மேலும் நந் தமிழ்நாட்டைப் பாழ்படுத்துவனவாதலும் நன்கு விளங்காநிற்கும். அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/110&oldid=1592249" இலிருந்து மீள்விக்கப்பட்டது