உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

2. காதலுஞ் சாதியும்

காதலன்புடையார்க்கு அக்காதல் அன்பின்வழியே மனஞ் செல்லுமல்லாமல், மனத்தின் வழியே காதல் செல்லாமை ஆன்றோர் செய்யுள் வழக்கினுள்ளும் உலக வழக்கினுள்ளும் வைத்துச் செவ்வனே அறியக்கிடந்த தொன்றாம். காதலென்பது ஒருவர் ஒருவரை இன்றியமையாராய் விழைந்து நிற்கும் பெருவேட்கையாய், “எல்லா உணர்வினையும் நீக்கித்தானேயாய் நாண்வழிக் காசுபோலவும் நீர்வழி மிதவைபோலவும் பான்மை வழியோடி இருவரையும் புணர்விக்கும்” திறத்தை தென்பது ஆசிரியர் தெய்வப் புலமை நக்கீரனார் இறையனராகப் பா ருளுரையில் விளக்கியவாற்றால் நன்கு விளங்கும். வ்வுண்மை எமது தலைமைப் பேருரையில் எடுத்துக் காட்டப்பட்ட பரிபாடற் செய்யுளிற் போந்த “காதற் காமம் காமத்திற் சிறந்தது" என்பதனாலும் நன்கு

ெ இவ்

புலனாம். வையெல்லாம் நல்லாசிரியரை அடுத்து உணரும் பேறு வாயாத மறுப்புரைகாரர், மனஞ் சென்றவாறு சென்று துய்ப்பதே காதலின்பமெனக் கரைந்தார். மனஞ் சென்றவா றெல்லாஞ் சென்று துய்ப்பது இழிந்த காம இன்பமே யாமென்பதும், அவ்விழிந்த காமத்தினையே ஆன்றோர் களெல்லாரும் வழுவெனக் கொண்டாரென்பதும் அம் மறுப்புரைக்காரர் உணரார் கொல்லோ! விழுப்பமுந் தூய்மையும் வாய்ந்த காதலன்பின் வயப்பட்டார் இருவர் தம் முன் ஒருவரை யொருவர் உயிர்போல் நினைந்துருகி ஒழுகுந் தன்மை யராதலின் அவர்மனம் அவர்தங் காதலன்பின் கீழடங்கிநின்று பிறர்பாற் செல்லாதாகலின் காதலன் புடையார்க்கு அவர்தம் மனம் அடங்காதோடிக் காமத் துறையிற் படிதல் சிறிதுமே இல்லையென்று அவர் உணர்வாராக. மற்றுக், காமவேட்கை யுடையார்க்கோ அவரது மனம் அவர்வழி அடங்கி நில்லாது பலரையும் நச்சி நச்சிக் காமத்துறையில் வீழ்ந்து மாழ்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/112&oldid=1592258" இலிருந்து மீள்விக்கப்பட்டது