உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மறைமலையம் - 30

மாதலின், மனத்தின் வழிச் செல்வது 6 காமமேயன்றிக் காதலன்றென்பது இனியாயினும் அவர் பண்டைத் தமிழ் நூல்களைப் பயின்று உணர்வாராக!

இவர்

இனிக், காதலன் பின் நுகர்ச்சிக்கு வகுப்பு வேற்றுமை பெரிதுந் தடைசெய்வது சய்வது என்னும் உண்மையை இ ஏளனஞ்செய்கின்றார். இவர் இகழ்ந்துரையாத வெறுங்காம நுகர்ச்சியிலாவது வகுப்பு வேற்றுமை தடைசெய்து நிற்கின்றதா? என்பதைச் சிறிது உற்றுநோக்குதல் வேண்டும். தம்மை அழுத்தந்திருத்தம் வாய்ந்த சைவரெனக் கருதிக்கொள்வாரில் எத்தனையோபேர் தஞ் சாதி வரம்பு கடந்து மறைவிலே குறத்திகளை மருவுகின்றன ரென்றும், புலைச்சிகளின் தோள்களை மருவிக் களிக்கின்றன ரென்றும், பரத்தையர் வீடே குடியாய்க் கிடக்கின்றன ரென்றும், பலர் பலகாற் சொல்லக் கேள்வியுற்றிருக்கின்றேம். இவர் புகழ்ந்து பேசும் இழிந்த காம நுகர்ச்சியே மீறிச் சொல்லுமாறு ஏவ, உயர்ந்த தெய்வக் காதலன்பின் வயப்பட்டார் சாதி வரம்பைத் துகளாக்கித் தாங்கொண்ட புனித ஒழுக்கத்தில் நிற்குமாறு அஃது அவரைச் செலுத்துதலாற் போதரும் இழுக்கென்ன? இத்தூயவொழுக்கம் நம் பண்டைத் தமிழ்மக்கட்கு உயிர்போற் சிறந்த விழுமிய ஒழுக்கமாதலின், இதனை உண்மை யறிவுடைய ரெவருஞ் சிறிதுங் குறைகூறா ரென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/113&oldid=1592262" இலிருந்து மீள்விக்கப்பட்டது