உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

3. இலக்கண நூல்

அருளிச் செய்தது

லக்கண

தொல்காப்பியர் நூலாதலின், அவர் பொருளை அகம் புறம் என வகுத்து அகப்பொருளின்பாற் பட்ட இன்பத்தை முதற்கண்வைத்து, அறம்பொருள்களை அதன்பின் வைத்தாரல்லது, இன்பத்துக்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்பது பற்றி அதனை முதற்கண் வைத்தாரல்லர்; என்று அம் மறுப்புரைகாரர் கூறித், தொல்காப்பியர் ன்பத்துக்கே முதன்மை கொடுத்தா

ரன்னும் எமதுரையை மறுக்கின்றனர். தொல்காப்பியம் இலக்கணநூலாதலின் அதன்கட் கூறிய முறை கொள்ளற்பால தன்றென்பதே இவரது கருத்தாகின்றது. இலக்கண நூலின் இலக்கணம் இன்னதென்று உணர்ந்தனராயின் இவர் இங்ஙனங் கூறி இழுக்கார். இலக்கண நூல்களெல்லாம் இலக்கிய நூல்களின் சொற்பொருளியல்புகளை நன்காய்ந்து, அவை தம்மையே முறைப்படுத்தி உரைக்கும் தன்மையவாமென்பது லக்கியங் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின்” என்னும் நன்னூற் சூத்திரத்தினை அறிந்த சிறுமகாரும் உணர்வர். இதுதானு முணராது இலக்கணமுறை இலக்கியமுறையின் வேறாவது எனக்கொண்ட அம்மறுப்புரைகாரரின் தமிழறிவு சால அழகிது!

66

இலக்கியப் பொருளியல்புகளை முறைப்படுத்திச் சொல்லி விளக்குவதே இலக்கண மென்பது தமிழ்நூல் வடநூல் இயற்றிய ஆசிரியரெல்லார்க்கும் ஒப்ப முடிந்த தாகலின், தெய்வத் தொல்காப்பியனார் வகுத்துவிளக்கிய ‘அகப்பொருள்', 'புறப்பொருள்' இலக்கணங்கள் அத்தனையும், அவர்காலத்தும் அவருக்கு முன்னிருந்த சான்றோர் காலத்தும் இயற்றப்பட்ட நூல்களின் பொருளமைதிகளேயாதல் தெற்றென விளங்கா நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/114&oldid=1592266" இலிருந்து மீள்விக்கப்பட்டது