உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

4. பண்டை இலக்கியங்களும் இன்பமும்

L

இனிப், பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் இயற்றிய லக்கிய நூல்கள் தாமும், அஞ்ஞான்றை உலகியல் நிகழ்ச்சிகளை உள்ளவாறே எடுத்துக் கூறுந் தன்மைய வன்றி, உலகியலொழுக்கத்துக்கு மாறாவன சிறிதுங் கூறுவன அல்ல இஞ்ஞான்று ஆரியர்தம் பொய்வழக்கின்பாற் பட்டு உலகியல் வழக்கோ டொவ்வாத பலவற்றைப் பொய்யாகப் புனைந்து கட்டிச் சொல்லுந் தமிழ்ப்புலவர் போலாது, பண்டிருந்த தமிழ் நல்லிசைப்ப்புலவர்கள் பட்டது பட்டாங்கு மொழியும் பொய்யா நாவினர் என்பது பேராசிரியர் 'தொல்காப்பிய மரபியலிற்’ கூறியவுரையானும், பண்டைத் தமிழிலக்கியங்களை ஒரு சிறிது உற்றுநோக்குதலானும் இனிது உணரலாம். பண்டைக் காலத்துத் தமிழிலக்கியங்களிற் பெரும்பாலான இன்பத்தின் மேற்றான அகப்பொருளினையே மிகவிரித்து உரைத்தலும், இன்பத்தின் வழிப்படூஉம் வழிப்படூஉம் ஏனை அறம்பொருள்களின் மேற்றான புறப்பொருளினைச் சுருக்கியே பாடுதலும், நன்குணர வல்லார்க்கே பண்டைத் தமிழாசிரியர் எல்லாரும் இன்பத்துக்கே முதன்மை கொடுத்தமை நன்கு புலனாம். பழைய சான்றோர் செய்யுட்களைத் தொகுத்த எட்டுத்தொகையுள் ‘நற்றிணை’ நானூறு சொய்யுட்களும், 'குறுந்தொகை’ நானூறு செய்யுட்களும், ‘ஐங்குறுநூறு' ஐந்நூறு செய்யுட்களும், ‘கலித்தொகை' நூற்றைம்பது செய்யுட்களும் ‘அகநானூறு’ நானூறு செய்யுட்களும், பத்துப்பாட்டில் ‘முல்லைப்பாட்டு', நெடுநல்வாடை,’ ‘குறிஞ்சிப்பாட்டு,' 'பட்டினப்பாலை என்னும் நான்கு பெரும்பாட்டுக்களும்,பதினெண் கீழ்க்கணக்கில், ‘கார் நாற்பது' ‘ஐந்திணை ஐம்பது' ‘ஐந்திணை எழுபது' 'திணைமொழி ஐம்பது,' 'திணைமாலை நூற்றைம்பது,’ ‘திருக்குறள்’ காமத்துப்பால் இருநூற்றைம்பது 'நாலடியார்' காமத்துப்பால் முப்பது செய்யுட்களும் ஆகமொத்தம்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/115&oldid=1592269" இலிருந்து மீள்விக்கப்பட்டது