உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

83

கு

இரண்டாயிரத்து நானூற்றுத் தொண்ணூாற்று நான்கு அருந்தமிழ்ச் செய்யுட்களும் அகப்பொருளின் பாலதாகிய ன்பத்தையே நுதலுகின்றன.

இனி, எட்டுத்தொகையிற் செய்யுட்களும் ம் 'பரிபாடல்'

‘பதிற்றுப்பத்து' நூறு

எழுபது செய்யுட்களும்,

புறநானூறு' நானூறு செய்யுட்களும், ‘பத்துப்பாட்டில்' ஆறு செய்யுட்களும், பதினெண்கீழ்க்கணக்கில் 'நாலடியார்' முந்நூற்றெழுபது செய்யுட்களும், 'நான்மணிக்கடிகை' நூறு செய்யுட்களும் 'இனியவை நாற்பது' நாற்பது செய்யுட்களும் 'இன்னாநாற்பது' நாற்பது செய்யுட்களும் 'களவழி நாற்பது’ நாற்பது செய்யுட்களும், 'திருக்குறள்’ ஆயிரத்து எண்பது செய்யுட்களும் 'திரிகடும்’ நூறும், ‘ஆசாரக்கோவை' நூறும், 'பழமொழி' நானூறும், சிறுபஞ்ச மூலம்' நூறும், முதுமொழிக் காஞ்சி' ஒன்றும் ‘ஏலாதி’ நூறும், ஆகமொத்தம் மூவாயிரத்து நாற்பத்தேழு செய்யுட்களும் புறப்பொருளின் பாலவாகிய அறம் பொருள்களை நுதலுகின்றன. இவ்விரண்டையும் நுதலும் மூவாயிரத்து நாற்பத்தேழு செய்யுட்களையும் இருகூறாகப் பகுத்தாற், சிறிதேறக்குறைய அறத்துக்கு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்து மூன்றும், பொருளுக்கு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்து மூன்று செய்யுட்களுமே வருகின்றன. ன்பத்தை நூதலுஞ் செய்யுட்கள் மட்டும் இரண்டாயிரத்து நானூற்றுத் தொண்ணூற்று நான்கென்பது மேலேகாட்டப்பட்டமையால், இன்பத்தை நுதலுஞ் செய்யுட்கள் ஏனை அறம் பொருள்களைத் தனித்தனியே நுதலுஞ் செய்யுட்களினுஞ் சிறிதேறக்கு குறைய ஆயிரஞ் செய்யுட்கள் மிகுந்திருத்தல் காணப்படும்; இதுவேயு மன்றி, அறம் பொருள்களை நுதலும் பாட்டுக்களுள்ளும் இன்பத்தைக் கூறும் பகுதிகளும் ஆங்காங்கு ஆ விராய் வந்திருக்கின்றன. இவ்வாறாகப் பழந்தமிழ் இலக்கிய நூல்கள் யாங்கணும் பெரும்பான்மையாக எடுத்துப்பேசப்படுவது இன்பமேயாய் இருத்தலினாலும், ஏனை அறம் பொருள்களைச் சுட்டுவன அவற்றில் மிகக் குறைந்தனவாயிருத்தலினாலும் அவ் விலக்கியங்களின் வழியே இலக்கண நூல் செய்த ஆசிரியர் தொல்காப்பியனாரும், அவற்றொரு மாறுகொள்ளாமைப் பொருட்டு இன்பத்தை முதற்கண்ணும், ஏனைப் பொருள் அறங்களை அதன்பின்னுமாக வைத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/116&oldid=1592273" இலிருந்து மீள்விக்கப்பட்டது