உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் - 30 -30

"இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்”

என்று சூத்திரஞ் செய்தருளினார்.

எனவே, ஒருகாரணமும் பற்றாது தாம் எடுத்துக் கொண்ட அகப்பொருளுக்கேற்ப ஆசிரியர் தொல்காப்பியனார் இன்பத்தை முதற்கண் வைத்தாரல்லது, உறுதிப் பொருள்களில் இன்பமே முதல் நிற்கவேண்டு மென்பது அவர்க்குக் கருத்தன்று என்ற அம்மறுப்புரைகாரர் கூற்றும் பொருத்தமில் போலிக் கூற்று மென்க. பண்டைத் தமிழிலக்கியங்கள் எல்லாம் உறுதிப் பொருள்களில் முதல் நிற்றற்குரிய இன்பத்தின் விழுப்பம் உணர்ந்தே அதனை ஏனையவற்றினும் பார்க்க பார்க்க உயர்த் தெடுத்துப் பேசுவஆயின. அந்நுணுக்கம் உணர்ந்தே தொல்காப்பியனாரும் அகப்பொரு ளொழுக்கமாகிய ன்பத்தினை முன்வைத்து, ஏ ஏனைப் புறப்பொருள் ஒழுக்கங்களை அதன்பின் வைப்பாராயினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/117&oldid=1592277" இலிருந்து மீள்விக்கப்பட்டது