உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

89

வை

கூறினாரல்ல ரென்பதூஉம் விளங்க அறிந்திருப்பர். இ 6 யெல்லாம் ஒரு சிறிது முணராது தொல்காப்பியனார் கருத்தை அறிந்தார்போன்று

முற்றும்

அம்மறுப்புரைகாரர்தந் துணிபு,

66

துணிபுரை

'கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்

நிகழ்த்திய

என்னும் அருமைத் திருக்குறளுக்கு இலக்காய்த் தமிழ்வல்ல சான்றோரால் நகையாடற் பாலதாய் முடிந்தமை காண்க. என்று இத்துணையுங் கூறியவற்றால் ஆசிரியர் தொல்காப்பிய னார் இன்பத்தை முன்னும் ஏனைப் பொருளறங்களை அதன் பின்னும் வைத்துக் கூறிய முறையே அடிப்பட்ட சான்றோர்தம் நூல் வழக்கிற்கும் ஏனையுலக ஏனையுலக வழக்கிற்கும் பொருந்து வதாமென்பதூஉம், இம்முறையோடு திறம்பிப் புதிது புகுந்த பௌத்த சமண் சமயங்களின் பொருந்தா வழக்கேபற்றிப் பிற்காலத்தார் அறத்தை முன்னும் ஏனைப் பொருளின்பங் களைப் பின்னும் வைத்த தலைதடுமாற்ற முறை அவ்விருவகை மெய்வழக்கோடும் ஒவ்வாதாமென்பதூஉம் இனிது

பெறக்கிடந்தமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/122&oldid=1592297" இலிருந்து மீள்விக்கப்பட்டது