உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

6

7. திருவள்ளுவர் கொண்டது

""

தமிழ்முறையன்று

இனி, ஆசிரியர் திருவள்ளுவனார் அறம் பொருள் ன்பமென வைத்து நூல் செய்த முறை தமிழ்முறை யன்றாய்ப் பௌத்த சமண சமயத்தவர்களாகிய வடநூலார் தாமே புதிது வகுத்த முறையே யாதலை மேலே காட்னாம். இங்ஙனந் திருவள்ளுவர் கொண்ட முறை தமிழ்நுல் வழக்கன்றென் பதற்குத் திருக்குறளுக் குரைகண்ட பரிமேலழகியார் காமத்துப்பால்' முகத்தில் "இவர் பொருட்பாகு பாட்டினை அறம் பொருள் ன்பமென வடநூல் வழக்குப்பற்றி ஓதுதலான் என்று உரை உரைத்தமையே சான்றாம். பண்டுதொட்டு வந்த தமிழ்நூன் முறையெல்லாம் இன்பத்தை முன்னும் பொருளறங்களைப் பின்னும் வைத்தலேயாம் என்பதனை மேலே விரித்துக் காட்டினாம். ஈண்டுப் பின்னுஞ் சிறிது அதனையே காட்டுதல் இன்றியமையாதாகின்றது. பழைய பரிபாடலிற் செவ்வேற்மேற் பாடப்பட்டிருக்கும் ஒன்பதாம் பாட்டினை இயற்றியருளினவரான ஆசிரியர் குன்றம்பூதனார் அப்பாட்டின்கண் வடமொழி நான் மறைவல்ல புலவரை நோக்கித் தமிழது சிறப்பு அறிவுறுத்து கின்றுழித், தமிழுக்கே உரித்தான காதலின்ப ஒழுக்கத்தினையும் அவ்வொழுக்கத் தினையுடைமையால் வள்ளி நாச்சியார் சிறந்தமையும், அவ்வகத் தமிழை ஆராய்ந்தமை யால் முருகப்பிரான் சிறந்தமையும் நன்கெடுத்து விரித்து ஓதுவார்க்குங் கேட்பார்க்குந் தமிழ்ச்சுவை புலனாமாறு விளக்குதல் விளக்குதல் காண்க. இங்ஙனமே பத்துப்

பாட்டின்கண் ஒன்றாகிய குறிஞ்சிப்படை இயற்றிய நல்லிசைப் புலமை மலிந்த சான்றோருந், தங்காலத்திருந்த பேரறிஞர்களாற் "புலனழுக்கற்ற அந்தணாளன்” எனவும், “பொய்யா நாவிற் கபிலன் எனவும் புகழ்ந்து பாராட்டப்பெற்றவரும் ஆன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/123&oldid=1592301" இலிருந்து மீள்விக்கப்பட்டது