உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

91

ஆசிரியர் கபிலர் தமிழ்நலம் அறியாத ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்நலம் அறிவித்தற்பொருட்டுத் தாம் பாடிய குறிஞ்சிப்பாட்டின்கண், இக்காதலின்ப அகப்பொரு ளொழுக்கத்தினையே விரித்தெடுத்துப் பெரிதுஞ் சுவை துளும்பப் பாடியிருத்தல் காண்க. இன்னும் இதனை விரிப்பிற் பெருகும். இங்ஙனமெல்லாந் தமிழ்நாட்டின்கணிருந்த அடிப்பட்ட சான்றோரெல்லாருந் தமிழுக்குச் சிறந்தது இன்ப வொழுக்க மென்றே ஒருமுகமாய் நின்று கட்டுரைத்துச் சல்லுதலின், அவர்க்குப் பிற்காலத்தே நூல்செய்த திருவள்ளுவனார் கொண்டமுறை பரிமேலழகியார் காட்டிய வாறு தமிழ்முறை யன்றென்பது தெற்றென விளங்காநிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/124&oldid=1592305" இலிருந்து மீள்விக்கப்பட்டது