உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

8. திருவள்ளுவர் வேறுமுறை கொண்ட காரணம்

அற்றேல் தமிழ்மக்கள் பொருட்டுத் தமிழ்நூல் இயற்றப் புகுந்த திருவள்ளுவனார், அத்தமிழ் முறையொடு திறம்பி வடநூன் முறையைக் கைப்பற்றிய தென்னையெனிற் கூறுதும். இத்தென்றமிழ் நாட்டுப் பழைய வரலாறுகளை நன்காராய்ந் துணர்வார்க்குத் திருவள்ளுவனார் இருந்த கி.பி.முதல் நூற்றாண்டிற் பௌத்த சமண் மதங்கள் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற் குடிபுகுந்தமை நன்கறியக் கிடக்கும் இதற்குத் திருவள்ளுவர் காலத்தை யடுத்துச் செய்யப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பௌத்த சமண் காப்பியங்களே ஒரு பெருஞ் சான்றாம். அவ்வாறு குடிபுகுந்த அச்சமயிகள் இருபாலாரும், உலகியலொழுக்கத்தை ஆழ்ந்தாராய்ந்தறிந்த சான்றோர்தம் நூல்வழக்கை நுணுகி யாராயும் அறிவுமதுமை யின்றி இன்பத்தினை இழித்துப் பேசி, அவ்வாற்றால் ஏனை மக்களினுந் தாமுயர்ந்தார் போற் காட்டி, அங்ஙனங் காட்டுந் தமது கரவொழுக்கம் நிலைபெறுதற்பொருட்டு அறத்துக்கே உயர்வு சொல்வாராய், இந்நாட்டவரைப் பெரியதொரு பொய்ம்மயக்கிற் படுப்பாராயினர். இவ்வாறு இன்பத்தை இகழ்ந்து அறத்தை உய்த்துப்பேசி ஆரவாரஞ் செய்யும் பௌத்த சமண் குருக்களின் உரைகளைக் கேட்ட தமிழ்ப் பொது மக்கள், அவர் இகழ்ந்து பேசிய இன்ப வொழுக்கத்தைத் தாமும் ஏனை மக்களும் விடமாட்டாமை நன்குணர்ந்தும், அறவுரை கூறும் அவர் தம்மினும் உயர்ந்தார்போலுமென மயங்கிக், கரவொழுக்கத்தில் நிற்கும் அக்குருக்கண்மாரையும்,

அவர்தஞ் சாற் செயல்களையும் மிக உயர்த்துப்

பேசுவாராயினர். இவ்வாற்றாற் பௌத்த சமண் கோட்பாடுகள் உண்மையில் மக்களியற்கைக்கும், அவர்தம் உலகியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/125&oldid=1592309" இலிருந்து மீள்விக்கப்பட்டது