உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

13. தொல்காப்பியத்திற் சாதி இல்லை

னித், தொல்காப்பியத்தில் தொழில் வேற்றுமையே சொல்லப்பட்டதன்றிச், சாதிவேற்றுமை சொல்லப்பட ல் லயென்ற எமது மேற்கோளை, அம்மறுப்புரைக்காரர் மறுத்த பகுதி சிறிது ஆராயற்பாற்று.

மக்கள் வாழ்க்கையானது, அவர் தம்முள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு அவ்வாற்றால் ஒருவொருக்கொருவர் உதவியாய்நிற்ப. நடைபெறுவதாகும். ஒருவரே தமக்கு வேண்டும் பொருள்களையெல்லாந்

தம்முடைய முயற்சியினாலேயே தேடிக்கொள்ளுதல் இயலாது. பசித் வேளைக்குக் காயோ கனியோ பச்சிலையோ உண்டு, தழைகளை உடுத்துக், குகைகளிலும் மரப்பொந்துகளிலும் இருந்து உயிர் வாழும் மாக்களுங்கூடத் தம்முள் ஒருவருதவியை ஏனையோர் வேண்டி நிற்கின்றார். ஏதொரு முயற்சியுஞ் செய்ய அறியாத சிறு குழவிப்பருவத்தும், முயற்சி அவிந்த முதுமைப்பருவத்தும் மக்கள் பிறருதவியைப் பெறாமற் பிழைத்தல் இயலாதன்றே? முயற்சியும் ஆற்றலும் உடைய இளம்பருவத்தினருங் கூட இடையிடையே வரும் நோயானும் பிற துன்பங்களானுந் தம் முயற்சியும் வலிவும் இழந்து பிறருதவியை அவாவியபடியாய்க் கிடத்தலையுங் காண்டு மன்றோ? நாகரிகமில்லா மக்கள்ளுள்ளேயே ஒருவருதவியை ஒருவர் நாடாது உயிர்வாழ்தல் இயலாதாயின், அறிவும் இன்பமும் முறைமுறையே மிகும் நாகரிக வாழ்க்கையில் உள்ளவர்க்கு

அவாவாது

ஒருவருதவியை யொருவர் காலங்கழித்தல் இயலுமோ? உழவும் நெசவும் வாணிகமும் அரசும் போரும் ஓதலும் இறைவற்கு வழிபாடு ஆற்றலும் பிறவுமாகிய தொழில்களை யெல்லாம் மக்கள் ஒவ்வொருவருந் தாந்தாமே செய்வதென்றால், அதற்கு அறிவும் ஆற்றலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/139&oldid=1592364" இலிருந்து மீள்விக்கப்பட்டது