உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

107

போதாமையோடு வாழ்நாளுங் காணாது. ஆகவே, ஒவ்வொரு தாழிலையுஞ் சிறப்பாகச் செய்தற்கு ஒவ்வொரு தொகுப்பினர், இப்பாரதநாட்டிலே மட்டுமன்றி நாகரிகத்திற் சிறந்த ஏனை அயல் நாடுகளிலும் இன்றியமையாது இயற்கையாகவே பண்டுதொட்டு வகுக்கப்படுவாராயினர். இங்ஙனமாகப் பரந்து பல்வேறு வகைப்பட்டு நிகழுந் தொழில்களைச் செய்யும் மக்கள் எல்லாம் பதினெண் வகுப்பினராகத் தமிழ்நாட்டின்கட் பிரிக்கப் பட்டனர். மற்று, ஆரியர் வந்து குடியேறிய வடநாட்டிலோ எல்லாத் தொழில்களுங் கைத்தொழிலும் உழவுவாணிகமும் அரசும் ஓதுதலும் என நால்வகையுள் அடக்கப்பட்டு, அவற்றைச் செய்வார் முறையே சூத்திரரும் வைசியரும் க்ஷத்தியரும் பிராமணரும் என நால்வகுப்பாகப் பிரிக்கப்பட்டனர்.இவ்வாறு தென்னாடு வடநாடுகளிற் றொழில் வேறுபாடுபற்றிப் பண்டைநாளில் தனித்தனி வகுக்கப்பட்ட மக்கட்கூட்டத்தாருட் டாழில்வேற்றுமை ஒன்றேயிருந்த தல்லாமல், அக்கூட்டத்தார் ஒருவரோடொருவர் அளவளாய் உண்ணல் கலத்தல்களைச் செய்தலில் ஏதொரு வேறுபாடும் இருந்ததில்லை.

இனி, இத் தொழில் வேற்றுமையிலிருந்து, காலஞ் செல்லச் செல்லச் சில தொழில்கள் உயர்வாகவும் ஏனைச் சில தொழில்கள் தாழ்வாகவுங் கருதப்படலான காலந் தொட்டு, அவ்வக்கூட்டத்தார் தத்தம்மிலன்றிப் பிறரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்ய மறுத்தமையிற் 'சாதி வேற்றுமை உளதாயிற்று. ஒழுக்கத்தால் உயர்குணத்தால் நல்லறிவால் மெய்யன்பாலன்றி, வெறும் பிறப்பளவால் தம்மை யுயர்த்தி ஏனையோரைத் தாழ்த்திப் பேசுஞ் சாதியிறுமாப்புப் பெரும்பாலும் இத்தமிழ் நாட்டின் கண்ணேதான் உண்டாயிற்று. இத்துணைக் கொடிய சாதி வேற்றுமை வடநாட்டின்கண் இல்லாமை அங்குச் சென்றார் யாவரும் நன்குணர்வர். இங்ஙன மெல்லாம் முன்னில்லாத சாதி வேற்றுமை பின்னுண்டான வரலாறுகளை, அரிய பெரிய நூன்மேற்கோள்களுடன் சாதிவேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் நூலில் விரித்து விளக்கியிருக்கின்றேம். அவற்றிற் கெல்லாம் விடைதரமாட்டாத அம்மறுப்புரைக்காரர் ஒவ்வொரு கூட்டத்தார்க்குரிய ஒவ்வொரு தொழில் வரையறையினை நுவலுஞ் சில தொல்காப்பியச் சூத்திரங்களை எடுத்துக்காட்டி, அவ்வாற்றால் தொல்காப்பியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/140&oldid=1592368" இலிருந்து மீள்விக்கப்பட்டது