உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் 30 -

திலேயே சாதிவேற்றுமை சொல்லப்பட்டிருக்கின்றதென எளிதாகச் சொல்லிவிட்டார்.

இவர்தம் அறிவின் திறத்தை என்னென்பேம்! தொல் காப்பியத்திற் சாதிவேற்றுமை கூறப்பட்டதென நாட்டப் புகுந்தவர், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யவில்லை யென்றாதல், அன்றிச் செய்யலாகாதென்றாதல் நுவலும் அல்லது கட்டளை தருஞ் சூத்திரங்களிருந்தால், அவற்றையன்றோ எடுத்துக்காட்டல வேண்டும்? அவ்வாறு செய்தற்கு அந்நூலிற் சிறிதும் இடன்இம்மையால், அது செய்யமாட்டாராய் அவ்வவர்க்குரிய தாழில் வேறுபாடுகளை மொழியுஞ் சூத்திரங்களையே சாதிவேற்றுமையும் மொழிவனவாகப் பிழைபடக்கருதி அவைதம்மையே எடுத்துக்காட்டி இழுக்கினார்.

நன்று, தொல்காப்பியத்திற் சாதிவேற்றுமை நுவலுஞ் சூத்திரங்கள் இல்லாதது உண்மையேயாயினுந், தொழிலால் வேறுபட்ட கூட்டத்தார் பலர் தமக்குள் உண்ணல் கலத்தல்கள் நிகழ்ந்தமையாவது அதன்கட் சொல்லப்பட்டுளதோவெனின்! உளது. குறிஞ்சிநிலத்தில் வைகும் வேட்டுவமகளிரை மருதநிலத் தலைவர்களான வேளாளர்கள் மணந்து கொண்டமையும், அவர்களோடு ஒருங்கிருந்து அவர்கள் அட்டுப்படைத்த உணவினை அமிழ்தினுஞ் சிறந்தாகப் பாராட்டி அருந்தின மையுந், தொல்காப்பியத்துக் களவியல், 19 ஆஞ் சூத்திரத்தில், “புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்

பகா அ விருந்தின் பகுதிக் கண்ணும்” அ

என்றும்,

'வேளாண் எதிரும் விருந்தின் கண்ணும்

என்றும், 23 ஆஞ் சூத்திரத்தில்,

"வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்’

என்றும், கற்பியல், 5 ஆஞ் சூத்திரத்தல்,

“சொல்லென, ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமுதம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/141&oldid=1592372" இலிருந்து மீள்விக்கப்பட்டது