உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

109

என்றும் போந்த அருளுரைகளால் விளக்கமாக அறியப் படுகின்றன வல்லவோ? இங்ஙனம் அவ்வந்நிலத்துத் தொழிலால் வேறுபட்ட மக்கள் அதுபற்றித் தம்முள் உண்ணல் கலத்தல்களினும் வேறுபடாமல் ஒருங்கு அளவளாய் வாழ்ந்தமையினைத் தெற்றென எடுத்துரைக்கும் தெய்வத் தொல்காப்பிய நூற்கருதினை எள்ளளவும் உணர்ந்து பாராத அம்மறுப்புரைக்காரர், அதனைத் தமது சாதியிறுமாப்புரக்குத் துணையாகக்கொண்டது, பெரிய கருங்கல்லைப் புணையாகப் கொண்டு அரிய கடலை நீந்தப் புக்கோன் புன்செயலாய் முடிந்தமை காண்க.

அற்றாயினுந், தொழில்வேற்றுமை கூறியது கொண்டே சாதிவேற்றுமை உய்த்துணரக் கிடக்குமென்றும் ஆகாதோ வெனின்; ஆகாது, பண்டைநாளிலிருந்த மக்களுள் ஒரு குடும்பத் தாரிலேயே பலர் பற்பல தொழில்களைச் செய்தனரென்பதும், அவ்வாறு பலவேறு தொழில்களைச் செய்யினும் அதுபற்றித் தம்முள் வேறுபடாது ஒன்றாகவே யிருந்தனரென்பதும் இருக்குவேத ஒன்பதாம் மண்டிலத்தின்கட் போந்த ( )

“யான் பாடல்களைச் செய்கின்றேன்; என் தந்தையோ ஒரு மருத்துவன்! என் தாயோ தாயோ திரிகையில் தானியங்களை அரைக்கின்றாள்; செல்வத்தைப் பெறும், பொருட்டாகப் பலவேறு சூழ்ச்சிகளால் ஆக்களைப் போல யாம் வேண்டிய தொழில்களை மேற்கொள்கின்றோம்”

காண்க.

என ஓர் ஆரியக்குடிப்பிறந்தான் இயற்றிய செய்யுளால் நன்கு தெளியப்படுகின்றமை ஞ்ஞான்றும் பார்ப்பனர் என்றுஞ் சைவவேளாளர் என்றுந் தம்மை யுயர்த்துப் பேசிக்கொள்வாரிலேயே ஒருபாலார் நூல் ஓது கின்றார். ஓதுவிக்கின்றார், ஒருபாலார் திருக்கோயில்களில் தொண்டுபுரிகின்றார், ஒருபாலார் உழவுசெய்கின்றார் செய்விக்கின்றார் ஒருபாலார் ஊருர் சென்றும் ஓருரி லிருந்தும் பண்டங்கள் கொண்டு விற்கின்றார், ஒரு பாலார் உணவுப் பண்டங்கள் செய்துவிற்கின்றார், ஒரு பாலார் இசைபாடிப் பிழைக்கின்றார், ஒருபாலார் ஆடிக் காலங்கழிக்கின்றார், ஒருபாலார் அரசின்கீழ்ப் பல துறைகளில் அமர்ந்து ஊழியஞ்செய்கின்றார், ஒருபாலார் மருத்துவத் தொழில் புரிகின்றார், ஒருபாலார் மன்றங்களில்

நாடகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/142&oldid=1592376" இலிருந்து மீள்விக்கப்பட்டது