உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

139

நூல்வழக்கானும் உலகவழக்கானும் நன்கறியக் கிடக்கின்றது; நாம் பெரியராதற்கு இங்ஙனம் அம் மறுப்புரைகாரர் சொல்லும் நெறிதனிலேயுங்கூடச் சாதிவரம்பைச் சிதைத்து அன்பினால் தொண்டு செய்து ஒழுகும் விழுமிய ஒழுக்கமே புலனாகி நிற்கின்றதன்றோ? ஆகவே, “யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்” என்னும் பழமொழிக்கு அம் மறுப்புரைகாரர் இலக்கியமாய் நிற்கின்றார் கண்டீர்! இங்ஙனந் தாம் கொண்ட கோட்பாட்டுக்குத் தாமே மாறாய்நின்று, ஆன்றோர் கைக் கொண்ட உண்மை யன்பொழுக்கத்தைத் தம்மை யறியாமலே தம் வாயிற் புலப்படுத்திவிடுதலில் அம்மறுப்புரைகாரர் ரன்றி வேறு ஏவர் வல்லார்!

இனி, அப்பர் சுந்தரர் பெரியரான பிற் செய்த செயல்கள் குற்றமுடையவாயினன்றோ நாம் அவற்றைப்போற் செய்தலாகாது? மற்று, அவை அன்பினையே குறிக்கொண்டு, அன்புக்கு மாறான சாதிக்கட்டைத் தொலைத்த பெருஞ் சிறப்புடையவாகலின், நாமும் அவர் செய்த அச்செயல்கள் போற் செய்து அன்பரொடு அளவளாவுதலாற் போதரும் இழுக்கென்ன? இழுக்கில்லாத விழுமிய அந்நடைகளைத் தமது போலிப் புல்லறிவின் முனைப்பால்,அவர் இகழ்ந்துரைத்தால் அவ்வளவில் அவை இழிந்தவாய் விடுமோ? சாதிக்கட்டைச் சிதைத்து உண்மையன்பால் அறிவால் உய்ாந்த மேலோர்பால் உயரும் உடலுமாய்க் கலந்து ஒழுகுதலாற் போதரும் பொல்லாங்கு இன்னதெனக் காட்டாமல், வீணே அம் மேலோர் தம் ஒழுக்கத்தைப் பழித்துப் பேசிவிடுதலால் அது பொல்லாங் குடையதாய் விடுமோ? ஞாயிற்றின் பேரொளியினைக் கண்டு குரைக்குங் குக்கல், அவ்வாற்றால் அஞ்ஞாயிற்றின் பெருமையினைக் குறைக்கவல்லதாமோ? ஆதலால் அறிவு அன்பு ஒழுக்கஞ் சிவநேயம் அடியார் நேயங்களிற் சிறந்தார் “எக்குடிப் பிறப்பினும் ஏவரேயாயினும்” அவரோடு அன்பினால் ஒருங்கு அளவளாவி வாழ்தலே உயர்ந்த நடையாகுமன்றி, அந் நலங்கள் சிறிதுங் “கல்லா ஒருவன் குலநம் பேசுதல், நெல்லினுட் பிறந்த பதராகுதல்' திண்ணமாதலால் அவனை யொத்தார்பால் உடன்கூடி வாழ்தல் உயர்ந்த நடை யாகாமல் இழுக்குப்படு மென்க. எனவே, நாம் பெரியராகல் வேண்டுமாயின், பெரியரான அப்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/172&oldid=1592497" இலிருந்து மீள்விக்கப்பட்டது