உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் - 30 -30

சுந்தரர் முதலான நம ஆசிரியன்மார் நடந்துகாட்டியபடியே சிவநேயம் மிக்கு அடியார்பால் ஏதும் வேற்றுமை காணாது அன்பினால் அளவளாவுதலே செயல் வேண்டுமன்றி, ஏனைச் சிறியார் செய்யுஞ் சாதிவேற்றுமைக் கட்டிற கிடந்து நம்மையும் நம்மைச் சார்ந்தாரையும் அல்லற் கடலுட் படுப்பித்துப் பிறவித்துன்பத்தைப் பெருக்கலாகாதென் றுணர்ந்து கொள்க.

இனி, அப்பர் சுந்தரர் சாதிச்செருக்கை மாய்த்து முறையே சிவநேயம் மிக்காருடனிருந்து உணவுகொண்டதும், அவரைத் திருமணம் புரிந்ததுந் திருவருளால் உந்தப் பட்டுச் செய்த செயல்களாதலால், நான் என்னும் முனைப்புடைய நம் போல் வார் அவர்போற் செய்தலாகாது என்று அம் மறுப்புரகாரர் அடுத்தடுத்துக் கூவுகின்றார். திருவருளியக்கத்தால் அடியார் பால் நிகழுஞ் செயல்கள் இவை, தமது அறிவியக்கத்தால் அவர்பால் நிகழுஞ் செயல்கள் இவை இவை என்று பகுத்துக் காணாமல், அடியார் செய்யுஞ் செயல்களெல்லாவற்றையுமே திருவருட் செயல் திருவருட்செயல் என்று கூவும் அவர், எல்லா மக்களையும் பிறப்பளவில் வேற்றுமை தோன்றாது படைத்திருக்கும் அத்திருவருட் கருத்துக்கு மாறாக இவர் பிறப்பளவில் உயர்ந்தவர் இவர் பிறப்பளவில் தாழ்ந்தவர் என்று அருளின்றிக் கரைந்து அல்லற்படுவது பெரிதும் இரங்கற் பாலதேயாம், அப்பர் சுந்தரர் முதலான நம் ஆசிரியன்மார் தமக்கென ஓரறிவுந் தமக்கென ஒரு செயலுமின்றித், தாம் உண்டதும் மணந்ததுந் திருப்பதிகம் பாடினதுந் திருக்கோயில் கட்கு நடந்து சென்றதும் இறைவன்மாட்டு அன்பால் உருகினதும் அடியார்பால் நெஞ்சம் நெகிழ்ந்ததும் அவரோடு உரையாடினதும் பிறவுமெல்லாந் தஞ் சயலாகாமல் இறைவன் செயலேயாயின், அவரெல்லாம் உயிரும் உணர்வும் ல்லாவறிய இயந்திரங்கள் (பொறிகள்) ஆய் முடிவரல்லரோ? அவரை யெல்லாந் தனித்தனியே வைத்து அப்பர் சுந்தரர் என்றற் றொடக்கத்துப் பெயர்களால் தனித்தனியே வாழ்த்துதலும் வணங்குதலு மெல்லாம் நம் மாட்டுப் பொருளில் வறுஞ் செயல்களாய் முடியுமல்லவோ? அவர் இறைவனைப் பாடினதும் அவர் இறைவனை வணங்கனிதும் அவர்தஞ் செயலாகாமல் இறைவன் செயலேயாயின், இறைவனே தன்னைத்தானே பாடிக் கொண்டான், இறைவனே தன்னைத்தானே வணங்கிக் கொண்டான் என்று முடிக்கப்பட்டு, அவை இறைவற்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/173&oldid=1592501" இலிருந்து மீள்விக்கப்பட்டது