உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

143

காட்டும் நாடகவன்மையில் அம்மறுப்புரைகாரர்க்கு நிகராவார் எவருமே யில்லை யென்க.

அற்றேல்,

“நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன்

றஞ்செயல் தானேயென் றுந்தீபற’

எனப் போந்த அருளுரையால் மெய்யடிமை பூண்டார்பால் இறைவன் செயலன்றி, அவர்தஞ்

அந்நிலையை

அடைந்தார்க்கன்றி

சயல் சிறிதுஞ் தோன்றாதென்பது பெறப்படுகின்றதாலே வெனின்; அற்றன்று பொறி புலன் கருவிகளின் வழி அறிவும் முயற்சியும் நிகழாது, அவை யெல்லாங் கடந்து இறைவன் திருவருளிற் யோய்ந்து "பாலருடன் உன்மத்தர் பசாசர்குண மருவித்” தம்மையும் உலகத்தையும் மறந்து நிற்குஞ் சீவன்முத்தர் நிலையினைக் கூறும் அவ் வருளுரையினை, உலகத்துயிர்களை ஈடேற்றுதற் பொருட்டுத் தோன்றி அவ்வுயிர்கள்பால் அருளும் அன்பும் பூண்டு ஒழுகி, அவர்க்கு அவர்க்கு இறைவன்றன் றைவன்றன் அருட்செயல் மாட்சிகளைக் காட்டுவாரான நம் ஆசிரியர்க்கும் ஏனைச் சிவனடியார்க்கும் ஏற்றுதல் பொருந்தாதென்றுணர்க. சீவன் முத்தர்நிலை ஏனையோர்க்குப் பயன்படாது; சிவனடியார் நிலையோ அவர் தமக்கே யன்றி உலகத்துள்ள எல்லா வுயிர்க்கும் பயன்படுவ துடைத்து, அற்றேற், சிவனடியார் தம்முட் சீவன்முத்தராய் நின்றார் இல்லையோவெனின்; அற்றன்று, கண்ணப்பர், பெருமிழலைக் குறும்பர் முதலானவர் தம்மையும் உலகத்தையும் மறந்து இறைவன் திருவருட் பெருக்கிலேயே முழுதுந் தோய்ந்து நின்ற சீவன்முத்தரே யாவர்? மற்று, நம் சமயாசிரியன்மாருந், திருமூலர் காரைக்காலம்மையார் முதலான ஏனை நாயன்மார் பலருந் தாம் இறைவன் றிருவருளிற் றோய்ந்து நின்றதோடு அமையாது, உலகத்தாரையும் அந் நிலைக்குச் செலுத்தும் பேர் அருட்டிறம் வாய்ந்தவராகலான், அவர்பால் இறைவன் செயலே யன்றி அவர்தம் அருட்செயலும் ஒருங்கு விரவி நிற்கலாயிற்று. ஆகவே, இறைவனுக்கு அடிமைத்திறம் பேணுஞ் சான்றோ ருள்ளும் இவ்விருவேறு நிலைகள் கட்புலனாய்த் தோன்றக் காண்டலின், அவருள் ஒரு நிலையில் நின்றார்க்குரிய தன்மை யினை வேறொரு நிலையில் நின்றார்க்கு ஏற்றிக் கூறுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/176&oldid=1592510" இலிருந்து மீள்விக்கப்பட்டது