உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

-

மறைமலையம் - 30

பகுத்தறிவில்லாதார் செயலேயாமென்று ஓர்க. ஆகவே, ஆ அப்பரும் அப்பூதிகளும் ஒருங்கிருந்து திருவமுது கொண்டதுஞ், சுந்தரர் பரவை சங்கிலியாரை மணந்ததுந் திருவருட் செயல்களேயன்றி, அவர் தஞ் செயல்கள் அல்ல வென்ற அம் மறுப்புரைகாரருரை பொருளில் புல்லுரையே யாமென்று

தெளிக.

இனி, அன்பே உயர்ந்ததாகலின் அதனைக் கைக்கொள்க, சாதிவேற்றுமை தாழ்ந்ததாகலின் அதனைக் கொள்ளற்க என்று நம் ஆசிரியர் அறிவுறுத்தினராயின், அவ்வறிவுரையினை ஏற்று நடத்தல் வாய்வதாகும், மற்று அவர் நடந்த நடைகளைப் பார்த்து அவ்வாறு நடத்தல் வாயாது என்பதுபட அம் மறுப்புரைகாரர் தெளிவின்றிச் சில வரைந்தார். இவர் சொற்கள் நமக்கு இறும்பூதினை விளைத்தன, நம்மாசிரியன்மா ரெல்லாம் அன்பினையே யுயர்த்திச் சாதியினை இழித்துப் பேசியிருப்ப, “முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பதோடு” ஒப்ப, அவர்கள் அங்ஙனம் அறிவுரை கூறவில்லையென்று அம் மறுப்புரைகாரர் கூறியது எவரை ஏமாற்றுதற்கோ! நம் ஆசிரியன்மார் அங்ஙனம் கூறிய அறிவுரைகளை யெல்லாம் சாதிவேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் எமது நூலில் நன்கெடுத்துக்காட்டியிருக்கின்றேம். அவற்றைக் காணாதார், சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள்

66

கோத்திரமுந் குலமுங் கொண்டு என் செய்வீர்”

என்றும்,

“எவரேனுந் தாமாக இலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங்

கண்டால் உள்கி

உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம் நினைந்து”

என்றும் போந்த திருநாவுக்கரசு நாயனார் திருமொழிகளையும்,

“நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ்

சொல்லள வல்லாற் பொருளில்லைத் - தொல்சிறப்பின்

ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி ஆள்வினை

என்றிவற்றான் ஆகுங்குலம்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/177&oldid=1592511" இலிருந்து மீள்விக்கப்பட்டது