உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

145

என்றும்,

-

“சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கி லுள்ள படி

என்றும் போந்த சான்றோர் திருமொழிகளையுங் கருத்தில் இருத்தி, எவரும் அம்மறுப்புரைகாரர் சொல்லில் ஏமாறா திருக்கக்டவாராக!

னிச், சிவஞானசித்தியார் “தவஞ்செய் சாதி” என்று கூறுகின்றதே யன்றிப் பிறப்பளவிற் சாதியென்று யாண்டுங் கூறாமையாற், பிறப்பளவிற் சாதிவேற்றுமை பாராட்டும் அம்மறுப்புரைகாரர் அதனை யெடுத்துக் காட்டியது, தமது கொள்கையினை அது வேரோடு அறுக்கும் ஞானவாள் என்பதை அறியாமையாற் போலும்! இங்ஙனமே தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த,

"மேலிருந்தும் மேல அல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்’

6

என்னும் அருமைத் திருக்குறள், 'தம்மைப் பிறப்பளவில் உயர்ந்த வராகச் சொல்லிக்கொள்வராது குலத்திற் பிறந்தவராயினும், உயர்ந்த குணச்செயல்கள் இல்லாதவர் உயர்ந்த குலத்தவர் ஆகார்; பிறரால் இழிந்த குலத்தவராக ஒதுக்கப்பட்ட வகுப்பிற் பிறந்தவராயினும், உயர்ந்த குணச்செயல்கள் உடையவர்கள் கீழ்மக்களாக மாட்டார்’ என்று எளிதிற் பொருள் தந்து, அம்மறுப்புரைகாரர் பிறப்பளவிற்கொண்ட சாதிப் பதர்க்கொள்கையினை எரித்துச் சாம்பராக்குங் கொழுந் தீயா யிருந்தும், அதனை இவர் கையிலெடுத்தது எத்துணைப் பேதைமை! குலங்குடி சாதி என்னுஞ் சொற்களை ஆன்றோர் நூல்களிற் கண்டுவிட்டால், உடனே அம்மறுப்புரைகாரர், சாதி வேற்றுமை நம் தொல்லாசிரியர் நூல்களிற் சொல்லப்படு கின்றது, அஃதவர்க்கு உடம்பாடு என்று சொல்லப் பதறு கின்றார். ஆனால், நம் ஆசிரியன்மாரோ அன்பு அறிவு அருளொழுக்கம சிவநேய அடியார் நேயங்களின் மிக்காரை யெல்லாம் ஓரினப்படுததி உயர்ந்த சாதியாராகவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/178&oldid=1592512" இலிருந்து மீள்விக்கப்பட்டது