உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

-

மறைமலையம் - 30

அந்நலங்கள் இல்லாதாரை அவரின் வேறுபடுத்துத் தாழ்ந்த சாதியாராகவுங் கொண்டிருக்கின்றார்; அங்ஙனம் எம்மாசிரியர் குணத்தாற் செயலாற் கொண்ட சாதி வேற்றுமை எமக்கும் உடம்பாடேயாம்; ஆனாற் குணத்தையுஞ் செயலையும் பாராமற் பிறப்பளவிற் சாதிவேற்றுமை பாராட்டும்

66

அம்மறுப்புரைகாரரின் தீய சாதிவேற்றுமைதான் எமக்குடம் பாடாகாதது. அருச்சுனற்குக் கீதைநூல் செவி அறிவுறுத்திய கண்ணனும் அவரவர் குணத்தாலுஞ் செயலாலுஞ் சாதி வகுத்தேன் என்று கூறுதலுங் காண்க. உண்மை இவ்வாறாகலிற், பிறப்பளவில் உயர்வு சொல்லிக்கொள்ளும் 'பார்ப்பனர்' என்றுஞ்

சைவ

அம் மறுப்புரைகாரர், வேளாளர்' என்றுந் தம்மையுயர்த்துப் பேசிக் கொள்ளுங் கூட்டத்தாரில் எத்தனை பேர் குணத்தாலுஞ் செய்கையாலும் உயர்ந்தவர்! என்று நடுவுநிலைதவறாது நின்று எண்ணிப் பார்ப்பாராயின், ஆயிரவரில் ஐவர்தாமும் நல்லவராக இராமையை அவரே நன்குணர்ந்து கொள்வர்.

இனிச், சிவயோக நிலையில் ஈடுபட்டு நின்று தம்மையும் உலகத்தையும் மறந்து சிவமேயானாரைப்பற்றிப் பேசுதலால் ஈண்டைக்குப் பொருத்தமாவது ஏதும் இன்மையின், அன்னாரைக் குறித்து வறிதே விரித்தெழுதி வழுக்குதலில் அம்மறுப்புரைகாரர் தமக்கு நிகராவார் எவருமேயில்லை; ஆகவே, “அவ்வளவில் அவன் மகிழ்க" என்னும் நயமே பற்றி அவர் தமது திறனைத் தாமே மெச்சிக்கொண்டு மகிழ்ந்துகிடக்க விடுவேமாக.

இனித், தமிழ்நாட்டவரிற் பெரும்பாலரைத் தீண்டாதவர் என ஒதுக்கிவைக்குஞ் சாதிச் செருக்கர்கள், அத்தீண்ட ாதவர் பால் எல்லாவகையான உதவிகளையும் பெற்றுக்கொண்டு, மூன்று நான்கு வேளை கொழுக்க விலாப்புடைக்கத் தின்று உயிர்வாழ்ந்து வருபவராய்த், தமக்கு அவ்வுதவிகளைச் செய்யும் அவ்வேழை யெளிவர்களுக்கு ஒருவேளை நல்லுணவுகூடக் காடாமல் அவர்கள், பட்டினியும் பசியுமாய்க்கிடந்து துன்புறச் செய்வதுடன், அவர்கள் கடவுளை வணங்குதற்குக் கோயில்களினுள்ளே வருதலும் ஆகாதென்று கொடுமை செய்வதுந் தெய்வத்துக்கு அடுக்குமா என்று யாம் எழுதிய பகுதியைக் கண்டு அம்மறுப்புரைகாரர் வயிறெரிந்து பட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/179&oldid=1592513" இலிருந்து மீள்விக்கப்பட்டது