உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

147

போகின்றார். ஏனென்றால் இவரும் இவரோ டொத்தாரும் உயர்ந்த சாதியாராம்; மற்றையோர் தீண்டத்தகாத இழிந்த சாதியாராம்; ஆதலால் அவரோடிருந்து கடவுளை

வணங்கினால் தமக்கு நரகம் வந்துவிடுமாம். என்னே இவர்தம் பேதைமை! என்னே இவர்தஞ் சாதி யிறுமாப்பு! தம்மைப் போலவே கடவுளாற் படைக்கப்பட்ட மக்களை இவ்வளவு குறைத்துப் பேசும் இவர் எவ்வளவு ஈரமற்ற வன்னெஞ்சராய் இருக்கின்றார்! கடவுளின் வியக்கத்தக்க படைப்பாய், அக்கடவுளின் பிள்ளைகளாய் இருக்கும் மக்களில் ஒரு பெரும் பகுதியாரை இழித்துப் பேசும் இவர் வர் உண்மையாகவே

கடவுளிடத்து அன்புடையவராயிருத்தல் கூடுமோ! தாம் அவர்களோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யாதொழியினும், அவர்களைக் கோயில்களினுள்ளே வணங்கவும் விடாமை எத்துணைப் பெரிய வன்கண்மை! இத்தகைய வன்கண்ணர் இருக்கும் வரையில் மக்களுள் ஒற்றுமையும் அன்பும் உண்டாகா; இத்தமிழ்நாடு, ஒன்றொடொன்று பகைத்துப் போரிட்டு மாயும் மறவிலங்குகள் உள்ள காடாகவே சீரழியும்! இத்தகைய கொடியரால் மக்கள் ஒற்றுமையின்றிப் பல வேறு வேறு சிறு சிறு வகுப்பினராய்ச் சிதர்ந்தமையா லன்றோ, இந்நாட்டவர் வலிவிழந்து, துருக்கர் முதலான அயல்நாட்டு மக்களின் படையெடுப்பின்கீழ் அகப்பட்டு நசுங்கிக் கணக்கின்றி மாய்ந்தனர்! இந்நாட்டவர் ஒற்றுமையும் வலிவும் உடைய வராயிருந்தால், அவ்வயல்நாட்டவர் இங்கே தலைக்காட்டலுங் கூடுமோ! இறைவனருளால் ஆங்கில அரசு இந் நாட்டின் கண் நிலைப்பட்டகாலந் தொட்டன்றோ, தாழ்த்தப்பட்ட, டுக்கப்பட்ட வகுப்பினர் சிறிது சிறிதாக ஏனையோர்க்குள்ள உரிமைகளைப் போல்வன தாமும் பெற்று மேலேறி வருகின்றனர். இம்முறையாக மட்டும் இந்நாட்டில் இது காறும் நிலைபெறா திருந்தால், மறுப்புரைகாரரை யொத்தக் வன்கண்ணரால் இந்நாட்டவர் இன்னுஞ் சீர்குலைந்து, இந்நாடு முற்றுமே பாழடைந்து போயிருக்கும். முன்னேவந்திருக்க அரசரால் இந்நாட்டவரடைந்த துன்பவரலாறுகளை நன்கறிந்தவர்க்கே யாம் கூறும் இவ்வுண்மை புலப்படும்.

இந் நாட்டவரிற் சாதிவெறி பிடித்த வகுப்பார் சிலர் நடுவுநிலை சிறிதுமின்றித், தம்மிற் றாழ்ந்தவராகத் தம்மாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/180&oldid=1592515" இலிருந்து மீள்விக்கப்பட்டது