உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் லயம் - 30

கருதப்பட்ட ஏழை யெளிய மக்கட்குச் செய்த தீமைகட்கு ஓரளவேயில்லை. அவ் வெளியமக்கள் உண்ணச் சோறும் உடுக்கக் கூறையுமின்றி, அதனால் உடல் வலிவிழந்து, கல்வியுணர்ச்சி யில்லாமையால் அறிவுவலிவு மிழந்து நிலை கலங்கி நின்றமையா லன்றோ, அவர்கள் இந் நாட்டின்மேற் படையெடுத்து வந்த துருக்கர் மதத்தை நூறாயிரக்கணக்காய்த் தழுவித் தாமுந் துருக்கராயினர். துருக்கருக்குப் பின்வந்த போர்த்துக்கேசியர், உலாந்தாக்காரர் இந் நாட்டின்கட் பரவச் செய்த கத்தோலிக் கிறித்தவ மதத்தைத் தழுவினவர்களும் எண்ணிறந்தவர்களாவர். இங்ஙனம் இவ்விந்தியநாட்டு மக்களில் மூன்றிலொரு கூறார் அயல் நாட்டவர் மதங்களைத் தழுவி, அவ்வாற்றால் பல நலங்களை அடைந்தனர், இப்போதுஞ் சாதி வெறிபிடித்த மறுப்புரைகாரர் போல்வார் செய்யுங் கொடுமைகட்கு அஞ்சியும், இந்துமதத்தின் பெயரால் இன்னவர் செய்யும் அறிவற்ற நடுவுநிலையற்ற செயல்களைக் கண்டு அருவருத்தும் ஒவ்வொருநாளும் அயல்மதம் புகுவார் தாகை பெருகியே வருகின்றது. வ்வாறு நிகழும் நிகழ்ச்சிகளை வரலாற்று நூல்களால் அறிந்து கொள்ளும் ஆங்கில உணர்ச்சி வாயாத சாதிச் செருக்கர்கள், திருநெல்வேலி நாட்டையும் மலையாள நாட்டையும் போய்க் காண்பர் களாயின், அந்நாடுகளில் முறையே கிறித்துவர் தொகையும் மாப்பிளைத் துருக்கர் தொகையும் மிகுந்திருத்தற்குக் காரணம், மற்றை நாடுகளைவிட அந் நாடுகளிற் சாதிவெறி பிடித்தார் கூட்டம் மிகுதியாயிருப்பதுவேதான் என்பதனை நன்கறிந்துகொள்வார்கள். அதுகிடக்க.

விட

இனித், திருக்கோயில்களினுள்ளே தீண்டாதவர்களை ாமை ஏன் என்றால், அவர்கள் மாட்டிறைச்சியுண்டு, கட்குடித்து, ஆண் பெண்கள் வரைதுறையின்றி ஒருவரை யொருவர் மருவிக் களித்துத், துப்புரவின்றி முடைநாற்றம் வீச உலவுதலாலேதான் என்று சாதி வெறியர்கள் கூறுகின்றார்கள். ஆனால், தீண்டாதவர்கள் மட்டுந் தாம் இங்ஙனம் நடப்பவர்களா என்று உற்றுநோக்கினால், அவர்கள் நிகழ்த்துந் தடை பொருந்தாப் புல்லுரையேயாதல் நன்கு விளங்கும். இப்போது திருக்கோயில்களின் உட்செல்வார் எல்லாரும் புலாலுங் கள்ளும் மறுத்து, ஒருவனையே மருவும் ஒருத்தியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/181&oldid=1592516" இலிருந்து மீள்விக்கப்பட்டது