உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

149

ஒருத்தியையே மருவும் ஒருவனுந் தாமாவென்று ஆராய்ந்து பார்மின்கள்! பார்ப்பனர் சைவர் என்று பெயர்கொண்டாரில் எத்தனையோ பெயர், தீண்டாதவர்க்கு வறுமையால் உண்ணக் கிடையாத எத்தனையோ வகையான விலங்கின் இறைச்சி களையும் எத்தனையோ வகையான சாராயங்களையுந் தாம் உட்கொள்கின்றார்கள் என்பது நாடெங்கும் பேச்சாய்க் கிடக்கின்றது! இவர்களுள் எத்ததையோ பெயர் குறத்தி புலைச்சி முதலான தம்மால் விலக்கப்பட்ட மகளிரையுங் கூடிக் களிக்கின்றனரென்னுஞ் சொல்லும் ஊரெங்கும் உலாவு கின்றது! இவர்களெல்லாங் கடவுளிடத்து அன்புடையார் போற் றம்மைப் பிறர் மெச்சிக் கொள்ளும் பொருட்டுக் கோயிலினுள்ளே ஆடம்பரத்தோடு செல்லவில்லையா! பார்ப்பனர், சைவரிற் பலர் மறைவிலாவது ஊனுஞ் சாராயமும் உட்கொள்கின்றார்கள். இவ்விரு வகுப்பின ரல்லாத ஏனை வகுப்பினர் எல்லாருமோ வெளிப் படையாக ஆட்டிறைச்சி கோழியிழைச்சி முட்டை மீன்முதலான எத்தனையோ வகையான உண்பவர்களாயிருக்கின்றார்கள்; இவர்களில் எத்தனையோ பலர் கள்ளுஞ் சாராயமும் வெளிப்படையாக அருந்துபவராயுங் காணப்படுகின்றனர். இவர்கள் எல்லாருங் காணக் கண்ட கண்ட மகளிரொடு கைகோத்து உலவுதலைக் காணாதவர் யார்? இவர்கள் திருவிழாக்காலங்களிலும் மற்றை நாட்களிலும் வேசியரையும் பிற மகளிரையும் அழைத்துக் கொண்டு திருக்கோயில்களினுள் வரவில்லையா?

ஊனை

L

இவர்

அதுவேயுமன்றி, ஒவ்வொரு கோயிலிலுங் கோயிலுக் கென்று விடப்பட்ட பரத்தையர்கள் எத்தனைபேர்! களெல்லாந் தனித்தனியே ஒருவனைப்பற்றி ஓரகத்திருப்ப வர்களா? இல்லையே; பொருள் தருவார் எவராயிருப்பினும் அவர்தோள் மருவிக் களிப்பவரல்லரோ! இன்னும் இவரே யன்றித் தமிழ்நாடல்லாத பிறநாடுகளிலிருந்து வந்து திருக்கோயில்களினுட் சென்று வணங்குவார் தொகைக்கு ஒரு கணக்குண்டோ? இவர்களில் இன்னார் தீண்டத்தக்க சாதியார், மற்று இன்னார் தீண்டத்தகாத சாதியாரென்று பகுத்துக் கண்டவ ருண்டோ? இன்னுந் தமிழ்நாட்டிலேயுங் கூட ஓர் ஊரில் தீண்டாதவர் என்று சொல்லப்படும் மக்கள், பிறிதோர் ஊரிலுள்ள திருக்கோயிலினுட் சென்றுவணங்கி வருதலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/182&oldid=1592517" இலிருந்து மீள்விக்கப்பட்டது