உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

-

மறைமலையம் - 30

மறைவாகநிகழ்ந்து வருதலை அறியாதார் யார்? வெறுந் தோற்றத்தளவில் இவர் உயர்ந்த சாதியார், இவர் தாழ்ந்த சாதியார் என்று பகுத்தறிதற்குரிய அடையாளங்களை, எல்லாரையும் படைத்த இறைவன் எந்த மக்களுடம்பிலும் படைத்துவையாதிருக்க, அவன் திருவுளக்கருத்துக்கு முற்றும் மாறாய், ஒருவர் தம்மை யுயர்ந்தவராகவும் மற்றையொருவரைத் தாழ்ந்தவராகவுந் தமது இறுமாப்பினாற் கருதிக்கொண்டு, தம்மாற் றாழ்த்தப்பட்டவர்க்கு அளவிறந்த கொடுமைகளைத் தொடர்பாகச் செய்து வருவது, அங்ஙனஞ் செய்வார் தம்மை வேரோடு அழிக்குங் கருவியாய் வலிவேறி வருதலை அம் மறுப்புரைகாரர் அறியார் கொல்லோ!

இனித், தீண்டாதவர்பால் முடைநாற்றம் வீசுகின்றதெனக் கூவுவோர், அவர் செய்யுங் கடுமையான தொழில்களையும், அத்தொழில் மிகுதியாலுங், குளித்து முழுகித் துப்புரவா யிருக்கத்தக்க வசதிகளைச் சாதிக்கிறுக்கர்கள் அவர்கட்குத் தராமையாலும், வறுமையால் நல்ல ஆடை உடுக்கவும் நல்ல வீடுகளில் இருக்கவும் இயலமையாலும் அவர்கள் அங்ஙனம் அழுக்கேறி முடைநாற்றம் வீசப்பெறுகின்றார்களென்பதை

அறியாததென்னையோ! அவர் செய்து தருந்தொழில்களி னுதவியாற் செல்வமுடையராகித் துப்புரவான ஆடைகளும் அகன்ற பெரிய இல்லங்களும் பெற்றுக் கொழிக்குஞ் சாதிக் கிறுக்கர்களைப் போல் அவ் வேழையெளியவர்களும் இனிது வாழப்பெற்றால் அவர்கள் பால் அந் நாற்றங் காணப்படுமா? விலக்கப்பட்ட வகுப்பாரிலிருந்து கிறித்துவ மகமதிய மதங்களுட் புகுந்து நிலையுயரப் பெற்றவர்க்குள் இத்தகைய முடைநாற்றங் காணப்படுகின்றதா? சிறிதும் இல்லையே! சாதிக்கிறுக்கர்கள் தாம் பயன்படுத்துங் கிணறுகள் குளங்கள் முதலான நீர்நிலைகளில், அவ்வேழை யெளியவர்களை ஒரு குடங்கை நீரும் எடுக்கவிடாமையாலன்றோ, தம்மைப்போல் அவர்களுந் தக்க இடங்களில் இல்லங்கள் மைத்துக்கொள்ள சையாமையாலன்றோ ஐயோ! அவர்கள் எல்லாரும் அங்ஙனம் இரங்கத்தக்க நிலையிலிருந்து இன்னலுறு கின்றார்கள்! இங்ஙனம் அவ்வேழை யெளியவர்கள் அருவருக்கப் படும் நிலையிலிருத்தற்குக் காரணர் சாதி வெறிபிடித்தவர்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/183&oldid=1592518" இலிருந்து மீள்விக்கப்பட்டது