உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் - 30

வு

நந்தனார் வரலாற்றினை ஏன் மேற்கொள்ளலாகாதென்று எம்மை வினாவுகின்றார். மறுப்புரைகாரரைப் போலவே சாதிவெறி பிடித்த கோயிற் குருக்கண்மார் அந்நாளிலும் இருந்தமையின், நந்தனாரைக் கோயிலினுள் விடாதே தடுத்தனர். எல்லாம்வல்ல இறைவனோ, அக்குருக்கண்மார் இழிந்தாராதலும் நந்தனார் உயர்ந்தாராதலுந் தேற்றுதற் பொ ாருட்டு, நந்தனாரைத் தீயிற் குளிப்பித்துக் கோயிலினுட் புகுவித்தான். தீயிற் குளித்தும் பழுது படாத தெய்வயாக்கை யுடைய நந்தனார் பெருமைக்குக், தீயிற் படிற் படுசாம்பராய் வந்தொழியுங் கொழுத்த வுடலினையுடைய அக் குருக் கண்மார் சிறுமைக்கும் உள்ள வேற்றுமை இதனால் நன்கு புலனாகின்றதன்றோ? குருக்கண்மார் நந்தனாரைக் கோயிலினுள் விடாது தடுத்தாற்போல, இறைவனும் அவரைத் தடுத்தனனா? இல்லையே; எப்படியாவது அவரை அதனுட் புகுவித்தற்கன்றோ வழிசெய்தான். அங்ஙனம் இறைவன் அவற்குக் காட்டிய அருள் நிகழ்ச்சியினை மேற்கோளா யெடுத்துத், தீண்டாதவ ரெனச் சாதிக்கிறுக்கர்கள் இழித்துப்பேசும் நன்மக்களைக் கோயிலினுள் விடுவதற்குப் பரிந்து பேசுவதே சான்றோர்க்குக் கடனாயிருக்க, அதற்கு மாறாய் அம்மறுப்புரைகாரர் தம்போற் சாதிவெறி பிடித்த அக்குருக்கண்மார் அவரிடத்துக் காட்டிய மருள் நிகழ்ச்சியினை மேற்கோளாயெடுக்க வேண்டுமெனக் கரைந்தார். என்னே இவர்தந் தீவினை யிருந்தவாறு!

இவரைப்போலவே, மற்றை மக்களை இழிந்தவராகக் கருதி, அவர் கூட்டத்திற் சென்று வந்த தமக்குத் தீட்டுண்டாயிற் றெனக் கருதிய நமிநந்தியடிகள் என்னும் பார்ப்பன அடியார்க்குச், சிவபிரான் அவர்கொண்ட அக் கருத்துப் பழுதாதல் காட்டி நல்லறிவு கொளுத்திய வரலாற்றினைப் பெரிய புராணத்தின்கட் பார்த்திருந்தனராயின், அம்மறுப்புரைகாரர் இவ்வாறெல்லாஞ் சாதிவெறி கொண்டு அலறார். அதுவும் பாராத அவர்தந் தீவினைக்கு யாம் இரங்குதலேயன்றி வேறு என்செய்வம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/185&oldid=1592520" இலிருந்து மீள்விக்கப்பட்டது