உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

29.3.1914

13.9.1917

3.4.1918

14.12.1921

27.4.1926

25.7.1926

10.8.1926

8.12.1926

2.9.1927

5.6.1928

மறைமலையம் - 30

வடமொழியில் உபநிடதங்களைக் கற்கத் தொடங்கினேன். இசாவசியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கினேன்.

திராவிடன் இதழின் நேற்றைய பதிப்பில் சிறுதேவைதைகட்கு உயிர்ப்பலியிடலாமா என்னும் என்

கட்டுரை வெளிவந்தது.

வெளிவந்தது (ஐரோப்பியப் போர்ப் பேரழிவுத் தீவிரம் நோக்க) கிறித்துவின் சமயம் முழுத் தோல்வி அடைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில்

கைம்பெண்களுக்கு

எளிதில்

திருமணம் நடக்கிறது. அவர்கள் திருமண முறிவு பெற்று மறுமணம் செய்து கொள்ளலாம். இது ஒரு நல்லமுறை. பெண்கள் விடுதலையாய் உள்ளனர்.

கல்வியும் சமயப்பற்றும் தூய்மையும் உடைய பஞ்சம நண்பர் சிலர் என்னைக் காண வந்தனர். இரவு 8.30 வரை பேசிக் கொண்டிருந்தோம்.

200 சம்பளம் என்று பேரகராதிக் குழுவுக்கு அழைக்க இறையடிச் சேவையை விட்டு மனிதர்க்குப் பணிபுரிதல் இயலாது என்று மறுத்தேன்.

தமிழ்ப்பல்கலைக் கழகம் நிறுவக் கருதிய அக்குழுச் செயலர்க்கு, அவ்வாறு நிறுவுவதன் தேவை இன்மையை வலியுறுத்தி எழுதினேன்.

திராவிட ஆய்வுமைய இயக்குநர் பணிக்கு அழைப்பது அறிந்தேன். இறைப் பணிக்கு என்னை ஆட்படுத்திக் கொண்ட பின்னர் அவ் வேலைக்கு விண்ணப்பிக்க மாட்டேன். பதிவாளதே அப்பொறுப்பை அளித்தால் ஏற்றுக் கொள்வேன் என்று கா.சு. பிள்ளைக்குப் பதில் விடுத்தேன்.

மயிலாப்பூர் சிவன் கோயிலில் என் மகளின் திருமணம் நடந்தது. சாதி வேறுபாடு பாராட்டாமல் அனைவர்க்கும் விருந்திடப்பட்டது.

திரு. இராமசாமி நாயக்கரும் அவர்தம் கட்சியினரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/207&oldid=1592546" இலிருந்து மீள்விக்கப்பட்டது