உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22.7.1928

4.1.1932

5.12.1947

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

175

செய்துவரும் கடவுள் மறுப்புப் பிரசாரத்தைத் தடுப்பது குறித்து நானும் திரு.வி.க.வும் கலந்து பேசினோம்.

இராயப்பேட்டை பால. பக்த சனசபையில்

'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’

என்னும் பொருள் பற்றிப் பேசுகையில் இராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கோட்பாடுகளையும் அவர்தம் சுயமரியாதை இயக்கத்தின் குறும்புகளையும் வன்மையாகக் கடிந்து கூறினேன்.

சாதியில் உழலும் இந்திய மக்களுக்காகக் காந்தியடிகள் அடிக்கடி நிறை செல்வதும் தியாகம் பல புரிவதும் தேவையில்லை. மூடநம்பிக்கை, பார்ப்பன வழிபாடு முதலானவற்றில் உழன்று சிதறுண்டு கிடக்கும் இந்திய மக்களுக்குத் தன்னாட்சிக்குரிய தகுதி இல்லை.

சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் இந்துக்களும் இசுலாமியர்களும் வடநாட்டிலே ஒருவர் ஒருவரைக் கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்தியர்க்கு நல்லறிவையும் அன்புணர்வையும் ஈசன் என்றே அருள்வானோ?

இந்நாட்குறிப்புகளால் அடிகளால்ா பற்றிய உள்ளகக் குறிப்புகள் பல அறியக் கிடக்கின்றமை தெளிவாம்

1.

அடிகளாரின் ஓய்வு ஒழிவு இலாப் படிப்பும், நூ

லாக்கமும் புலப்படும்.

2.

3.

4.

5.

தாம் சைவப்பற்றினர் எனினும் பல்வகைச் சமயங்களைப் பற்றியும் தெளிந்திருக்க வேண்டும். அதனையும் தக்கார் வழியே கேட்டுப் பெறவும் வேண்டும்.

எந்நூல் கற்றாலும் அந்நூற்பயன் தமிழ் மக்களுக்குக் கிட்டும் வகையில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பரப்புதல் வேண்டும்.

ஓர் ஆய்வாளிக்கு உண்மை காண்பதிலும் ஒருமைப்பாடு கொள்வதிலும் அழுந்திய நாட்டம் இருக்க வேண்டும்.

தம் சமயத்தவர், தம் நட்புக்குரியவர் என்பவற்றுக்காகத் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/208&oldid=1592548" இலிருந்து மீள்விக்கப்பட்டது