உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

235

2-3-1928 ‘குமரன்' ஆசிரியர் திரு. முருகப்ப செட்டியாரும் 'லோகோபகாரி' ஆசிரியர் திரு. நெல்லையப்ப பிள்ளையும் பிற்பகல் என்னைக் காண வந்தனர்.

30-4-1928 பண்டிதர் சதாசிவ பண்டாரத்தார் பிற்பகல் என்னைக் காண வந்தார். நெடுநேரம் உரையாடிக் கொண்டிருந் தோம்.

27-5-1928 திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் வந்தார். திரு. இராமசாமி நாய்க்கரும் அவர்தம் கட்சியி னரும் சைவ சமயத்துக்கும், சைவசமயக் குரவர்க்கும் எதிரான செயல்களில் ஈடுபடுவது குறித்து நெடுநேரம் உரையாடி னோம். இவற்றை எதிர்த்துத் தென்னகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் என் சொற்பொழிவுகட்கு ஏற்பாடு செய்யுமாறு அவரை வேண்டினேன். அவர் ஒப்புக் கொண்டார்.

5-6-1928 திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் வந்தார். திரு. இராமசாமி நாய்க்கரும் அவர்தம் கட்சியினரும் செய்து வரும் கடவுள் மறுப்புப் பிரசாரத்தைத் தடுப்பது குறித்துக் கலந்துரையாடினோம். கூட்டம் போட்டு அவர்தம் வாதத்தின் ஆழமின்மையை வெளிப்படுத்தலாம் என்று நான் கூறினேன்.

16-6-1928 திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள், அவர்தம் அண்ணன், தமிழ்நாடு ஆசிரியர் திரு. சொக்கலிங்கம் பிள்ளை, உடன் ஒருவர் என நால்வர் நேற்றுப் பிற்பகல் வந்தனர். திரு. இராமசாமி நாய்க்கர் நடத்தி வரும் நாத்திகச் சீரழிவு இயக்கத்தைத் திட்டமிட்டு எதிர்த்து முறியடிப்பது பற்றி என்னுடன் கலந்து பேசினர்.

27-6-1928 ராமசாமி நாய்க்கரின் சுயமரியாதை இயக்கமும் பிற வைணவரும் சைவ சமயத்துக்கெதிராகச் செய்துவரும் குறும்புகளைக் கண்டித்துக் கட்டுரை எழுதினேன்.

29-6-1928 கோடம்பாக்கம் சானகிராமப் பிள்ளையும் அவர்தம் நண்பரொருவரும் என்னைக் காண வந்தனர்; ராமசாமி நாய்க்கர் தொடங்கியிருக்கும் சுயமரியாதை இயக்கம் பற்றி என் கருத்தை உசாவினர். அவ்வியக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/268&oldid=1592628" இலிருந்து மீள்விக்கப்பட்டது