உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் - 30

குறும்புத்தனமானது என்றும், விரைவிலேயே அழிந்து விடும் என்றும் கூறினேன். பிற்பகல் திரு. வி. உலகநாத முதலியாரவர்கள் நான் சொல்லியபடி வந்தார். 'வைணவரின் குறும்புச் செயலே சுயமரியாதை இயக்கமாகும்' என்ற கருத்துடைய எனது கட்டுரையை அவரிடம் கொடுத்தேன். தமது கிழமையிதழில் இதனை வெளியிட இயலாது என்றும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது குறித்துத் தம் தம்பியிடம் கலந்து முடிவெடுக்கலாம் என்றும்

அக்கட்டுரையை எடுத்துச் சென்றார்.

கூறி

5-7-1928 சுயமரியாதை இயக்கத்தின் குறும்புத்தனம் பற்றிய என் கட்டுரையைத் திரு. வி. உலகநாத முதலியாரவர்கள் திருப்பிக் கொடுத்தார். இவ்வியக்கத்தின் தலைவர் எனப்படு பவரும் அவர்தம் தோழர்களும் சைவ சமயத்தையும் குரவரையும் அவதூறு செய்கின்ற கொடுமையைத் தடுக்க வேண்டும் என எந்தச் சைவரும் எண்ணுவதில்லை. சைவரின் மெத்தனத்தை என்னென்பது!

16-7-1928 சைவ சமயமும் சுயமரியாதை இயக்கமும் துண்டறிக்கையைத் தொடர்ந்து எழுதினேன். திரு. வி. கலியாண சுந்தர முதலியாரவர்கள் வந்தார்; அண்மையில் தாம் தெற்கு மாவட்டங்களில் மேற்கொண்ட பிரச்சார பயணத்தில் செய்த சைவசமயப் பணி பற்றி என்னோடு பேசினார்.

22-7-1928 இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை ஆண்டு விழாத் தலைமையேற்று, 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' எனும் பொருள் பற்றிப் பேசுகையில் திரு. இராமசாமி நாய்க்கரின் கடவுள் மறுப்புக் கோட்பாடு களையும், அவர்தம் சுயமரியாதை இயக்கத்தின் குறும்பு களையும் வன்மையாகக் கடிந்து கூறினேன்.

23-7-1928 நேற்றுக் கூட்டத்தில் நான் உரையாற்றுகையில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த தண்டபாணி பிள்ளை என்பார் கேள்விகள் கேட்டுக் குறுக்கிட்டார்.திருஞானசம்பந்த சுவாமிகள் சமணரைக் கொடுமைப்படுத்தினார் என்று சொல்வதற்குரிய சான்று ஒரு துளியும் இல்லை என்று சொல்லி அவர் கேள்விகட்குத் தக்க விடை அளித்தேன். என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/269&oldid=1592629" இலிருந்து மீள்விக்கப்பட்டது