உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

237

விடைகள் தண்ட பாணிப் பிள்ளைக்கும் கூடியிருந்தோர்க்கும் நிறைவு தந்தன. பொழிவு முடிந்ததும் எனக்கு நன்றி தெரிவித்து விட்டு அவர் சென்றார்.

24-7-1928 நேற்றுப் பல்லாவரத்துக்குத் திரும்புகையில் எழும்பூர் சென்று திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையைக் கண்டோம்; நீதிக் கட்சி குறித்து எச்சரித்தோம். அக்கட்சியில் நம்பிக்கை வைப்பதை விடுத்து, வழக்குரைஞராகப் பணியாற்று மாறு வெளிப்படையாகக் கூறினோம்.

4-8-1928 திரு. சாமி. சிதம்பரனார் தொகுக்கும் உடைநடைக் கோவையில் 'பேய்களும் ஆவேசங்களும்’ ‘சமரச சன் மார்க்கம்' ஆகிய கட்டுரைகளைச் சேர்க்க அவர்க்கு அனுமதியளித்தேன்.

10-8-1928 எனது ‘சைவமும் சுயமரியாதை இயக்கமும்’ கட்டுரை ‘லோகோபகாரி', 'சிவநேசன்' ஆகிய கிழமையிதழில் வெளிவந்தது.

20-8-1928 என் மாணவர் நா. துரைக்கண்ணன் ‘தமிழ் நாட்டில்’எழுதிய கட்டுரையைத் துண்டு வெளியீடாக அச்சிட்டு, சுயமரியாதை இயக்கத்துக்கு எதிராகத் திருநெல்வேலி அன்பர்கள் பரப்பி வருகின்றனர்.

24-8-1928 மாலையில் திரு. வி. கலியாணசுந்தர முதலியார வர்களும், திரு. பாலசுந்தர முதலியாரும், திருச்சி (கி.ஆ.பெ) விசுவநாத பிள்ளையும் என்னை ஈ.வே. இராமசாமி நாய்க்க ரோடு சமரசம் செய்து வைக்க வந்தனர்; நட்புப் பாங்குடன் நாய்க்கர்க்கு என்னைக் கடிதம் எழுதித் தர வேண்டினர். அவ்வாறே கடிமமெழுதித் திரு விசுவநாதப் பிள்ளையிடம் காடுத்தேன்.

26-8-1928 திரு. ஈ.வே. இராமசாமி நாயக்கர்க்கு நான் எழுதிய கடிதத்தைத் 'திராவிடன்' ஆசிரியர் வெளியிட்டு விட்டதைப் பற்றி உசாவ திரு. வ. சுப்பையா பிள்ளை வந்தார்.

6-9-1928 தவறான முறையில் என்னுடைய கடிதத்தைத் திராவிடனில் அதன் ஆசிரியர் வெளியிட்டமைக்கு மன்னிப்புக் கோரி திரு. ஈ.வே. இராமசாமி நாய்க்கர் எழுதி இருந்த குடியரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/270&oldid=1592630" இலிருந்து மீள்விக்கப்பட்டது